பவர் இல்லாத பதவி எனக்கு வேண்டாம்.. பாஜகவுக்கு பிடி கொடுக்காத விஜய்?

திமுக வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு வந்தார். அதனால்தான், அரசியலுக்கு வந்தது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏனெனில்…

vijay 2 1

திமுக வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு வந்தார். அதனால்தான், அரசியலுக்கு வந்தது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏனெனில் ஸ்டாலினுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக வருவதை அவர் விரும்பவில்லை. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பிரித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால் தற்போது வரை அவர் எந்த கட்சியுடன் கூட்டணி என அறிவிக்கவில்லை.

திமுகவை தோற்கடிக்க வேண்டுமெனில் விஜய் அதிமுக – பாஜக கூட்டணியோடு இணைய வேண்டும். அதை விட்டுவிட்டு தனித்து நின்றால் வாக்குகள் பிரியும். இது திமுகவிற்கு சாதகமாகவே அமைந்து 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். கரூர் சம்பவத்திற்கு பின் அதிமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. விஜையை எப்படியாவது NDA கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டுமென அதிமுக மற்றும் பாஜக தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

‘திமுகவை தோற்கடிக்க விரும்பினால் எங்கள் கூட்டணியில் இணையுங்கள்.. இல்லையெனில் கட்சியை விட்டுவிடுங்கள்.. எங்கள் கூட்டணியோடு இணைந்தால் உங்களுக்கு துணை முதல்வர் பதவி தருகிறோம்’ என பாஜக தலைமை சொல்லி இருக்கிறது. ஆனால் ‘துணை முதல்வர் பதவி என்பது அதிகாரமில்லாத பதவி. அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?.. ஆந்திராவில் கூட பவன் கல்யாண் துணை முதல்வராக இருக்கிறார்.. அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?..எனவே எனக்கு அது வேண்டாம்’ என தனது நெருங்கிய வட்டாரத்தில் சொல்லி வருகிறாராம் விஜய்.

அதோடு தனது கொள்கை எதிரி என விமர்சித்த பாஜகவோடும், நடிகராக இருந்தபோது பல வகைகளிலும் தனது குடைச்சல் கொடுத்த அதிமுகவுடனும் கூட்டணி வைக்கலாமா என யோசித்து வருகிறாராம். விஜய் தேர்தலில் இருந்து விலகி விட்டால் விஜய் ரசிகர்கள் மற்றும் விஜயின் ஆதரவாளர்கள் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என பாஜக மேலிடம் நம்புகிறதாம். எனவே, இதை முன்வைத்தே பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரம் விஜய் தற்போது எடுக்கின்ற முடிவுதான் அவரின் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.