நான் ரெடி தான் வரவா.. துணை முதல்வர் பதவி வேண்டாம்..! நம்பர் 2 எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. எப்போதும் நம்பர் 1 நான் தான்..

எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தது போல தோன்றும் வகையில், தவெக தலைவர் விஜய் “நம்பர் டூ” என்ற இடம் தனக்கு ஒருபோதும் பிடிக்காது என்றும், தான் எப்போதும் “நம்பர் ஒன்” ஆக இருக்கவே…

vijay 1

எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தது போல தோன்றும் வகையில், தவெக தலைவர் விஜய் “நம்பர் டூ” என்ற இடம் தனக்கு ஒருபோதும் பிடிக்காது என்றும், தான் எப்போதும் “நம்பர் ஒன்” ஆக இருக்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சினிமாவில் “நம்பர் ஒன்” விஜய்
விஜய்யின் இந்த மனநிலை சினிமா துறையில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அஜித், விஜய் என்று குறிப்பிடப்பட்ட நிலையில், “விஜய், அஜித்” என்று எழுத வேண்டும் என்று ஊடகங்களிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுவதுண்டு. ரஜினிகாந்த்தை விட தான் பெரிய ஸ்டார் என்பதை நிலைநிறுத்த, ஒரு முன்னணி பத்திரிகையில் “அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்” என்று எழுத செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இன்றைய தேதியில், ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்தான். மேலும், ரஜினி படங்களை விட விஜய்யின் படங்களே அதிக வசூல் ஈட்டும் படங்களாக உள்ளன. எனவே, தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவர் “நம்பர் ஒன்” இடத்தை பிடித்துவிட்டார் என்பதை மறுப்பதற்கில்லை.

அரசியலிலும் அதே “நம்பர் ஒன்” கனவு
சினிமாவில் போலவே அரசியலிலும் “நம்பர் டூ” இடத்தை பிடிக்க விஜய் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி பங்களிப்பு இல்லை என்று குறிப்பிட்டாலும், விஜய் தனது கூட்டணிக்கு வந்தால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், விஜய் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“ஜெயித்தால் முதலமைச்சர், தோல்வியடைந்தால் எதிர்க்கட்சித் தலைவர்” என்பதே விஜய்யின் உறுதியான முடிவாக உள்ளது. இன்னொரு கட்சியுடன் கூட்டணி அமைத்து, மற்றொரு கட்சியின் தலைவரை முதல்வராக்கிவிட்டுத் தான் இரண்டாவது இடத்தில் இருக்க அவர் விரும்பவில்லை. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்தபோது அதிகாரம் இல்லாமல் இருந்ததை பார்த்ததால், அதிகாரமற்ற துணை முதல்வர் பதவி அவருக்கு உடன்பாடில்லை. தற்போது பவன் கல்யாண் மற்றும் டி.கே. சிவகுமார் போன்றவர்கள் துணை முதல்வர்களாக இருந்தாலும் அவர்களுக்கு குறைவான அதிகாரங்களே உள்ளன.

எனவே, களத்தில் இறங்கினால் முதலமைச்சர் பதவிதான், அதற்கு மாற்றுக்கருத்தே இல்லை என்பதுதான் விஜய்யின் நிலைப்பாடாக தெரிகிறது.

கனவு நிறைவேறுமா?
சினிமாவில் “நம்பர் ஒன்” ஆனது போலவே, அரசியலிலும் விஜய் “நம்பர் ஒன்” ஆவாரா? தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரண்டு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி அவர் முதல்வராகும் கனவு நனவாகுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

விஜய்யின் ஆதரவு சக்திகளாக இளைஞர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க.வின் அதிருப்தி ஓட்டுகள், புதிய தலைமுறை ஓட்டுகள், சிறுபான்மையினர் ஓட்டுகள் என பலதரப்பட்ட வாக்காளர்கள் கருதப்படுகிறார்கள். இந்த அத்தனை ஓட்டுகளையும் அவர் ஈர்க்க முடிந்தால் அவரது கனவு நினைவாகலாம். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.