தவெக என்னோட கட்சியா? உன்னோட கட்சியா? புஸ்ஸியை வறுத்தெடுத்தாரா விஜய்? அரசுக்கு இணையாக உளவுத்துறையை அமைக்கும் விஜய்? நிர்வாகிகளை கண்காணித்து தினமும் வரும் ரிப்போர்ட்.. ரிப்போர்ட் அடிப்படையில் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்? விஜய்க்கு தெரியாமல் 70 வேட்பாளர்களை நியமித்த புஸ்ஸி?

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, கட்சியின் தலைமை மட்டத்தில் அதிகார போட்டி மற்றும் குழப்பங்கள் வெடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, புஸ்ஸி ஆனந்த் மற்றும் பிற நிர்வாகிகளுக்கு…

vijay bussy

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, கட்சியின் தலைமை மட்டத்தில் அதிகார போட்டி மற்றும் குழப்பங்கள் வெடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, புஸ்ஸி ஆனந்த் மற்றும் பிற நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள், தலைவர் விஜய்க்கே தெரியாமல் 70 சட்டமன்ற வேட்பாளர்களை நியமிக்கும் அளவுக்கு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க, அரசுக்கு இணையான ஒரு உளவு அமைப்பையே விஜய் களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தவெகவின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த், கட்சியின் தலைவர் விஜய்யின் ஒப்புதல் இல்லாமலேயே, கிட்டத்தட்ட 70 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பூத் கமிட்டி அமைப்பது, வாக்காளர்களை சேர்ப்பது போன்ற ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்க சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவல் விஜய்யின் கவனத்திற்கு வந்தபோது, புஸ்ஸி ஆனந்திடம் அவர் நேரடியாக கேள்வி எழுப்பியதாகவும், “யாரை கேட்டு இவ்வளவு முக்கிய முடிவை எடுத்தீர்கள்? இது என்னோட கட்சியா? உன்னோட கட்சியா?” என்று கடுமையான வார்த்தைகளில் கோபத்தை கொட்டியதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், புஸ்ஸியிடம் இருந்து திருப்திகரமான பதில் வராததாலேயே, நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

புஸ்ஸியால் அறிவிக்கப்பட்ட இந்த 70 வேட்பாளர்களும், தற்போது தங்கள் தொகுதிகளில் செலவு செய்து வேலைகள் செய்துவிட்ட நிலையில், தலைமை மட்டத்தில் ஏற்பட்ட இந்த மோதலால் தாங்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா இல்லையா என்ற குழப்பத்தில் உறைந்து போயுள்ளார்களாம்.

புஸ்ஸி ஆனந்தின் இந்த தன்னிச்சையான செயல்பாடுகளை, ஜான் ஆரோக்கியசாமி கவனித்துள்ளார். அவர் உடனே, கள நிலவரம் குறித்து ஒரு விரிவான உளவு அறிக்கையை தயாரித்து விஜய்யிடம் சமர்ப்பித்துள்ளார். புஸ்ஸியால் நியமிக்கப்பட்ட 70 வேட்பாளர்களில் பலர், தேர்தல் செலவுகளுக்கு திண்டாடும் நிலையில் உள்ளனர். அவர்கள் திமுக அல்லது அதிமுகவை எதிர்க்கும் அளவுக்கு பலமான வேட்பாளர்கள் இல்லை. மிக முக்கியமாக, நியமிக்கப்பட்டவர்களில் பலர் ஆளும் திமுகவுடன் மறைமுகமான ‘அண்டர்ஸ்டாண்டிங்’கில் அல்லது தொடர்பில் இருக்கின்றனர் என்றும் சில ஆதாரங்களுடன் ஜான் ஆரோக்கியசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாராம்.

இந்த அறிக்கை, தவெக தலைமையகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “புஸ்ஸி ஆனந்துக்குத்தான் கட்சியில் அதிக செல்வாக்கா, அல்லது ஜான் ஆரோக்கியசாமிக்கு அதிக செல்வாக்கா?” என்ற வெளிப்படையான விவாதம் நிர்வாக மட்டத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.

கரூர் விவகாரத்தில் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தன்னை தவறாக வழிநடத்தியதாக ஏற்கெனவே விஜய் கருதிய நிலையில், புஸ்ஸி ஆனந்த்தின் இந்த தன்னிச்சையான செயல்பாடுகள், கட்சியைக் கட்டுக்குள் கொண்டு வர அவரை தூண்டியுள்ளது.

கரூர் விவகாரத்துக்கு பிறகு, இரண்டாம் கட்டத் தலைவர்களை விஜய் தனித்தனியாக சந்தித்து பேசியபோது, அடுத்தகட்டத் திட்டம் குறித்து யாரும் யோசனை சொல்லாமல், ஒருவரை பற்றி ஒருவர் புகார் மட்டுமே தெரிவித்ததை கண்டு விஜய் விரக்தி அடைந்துள்ளார். மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் கட்சி நிர்வாகிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது குறித்தும் அவருக்கு எந்தத் தகவலும் வந்து சேரவில்லை.

இந்த நிலையில்தான், தன் கட்சியின் நிர்வாகிகளை கண்காணிக்க, சென்னையிலுள்ள தனக்கு நம்பிக்கையான ஒரு தனியார் உளவு அமைப்பை விஜய் நியமித்துள்ளார். இந்த ஏஜென்சி, கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என அனைவரின் செயல்பாடுகளையும் தினமும் கண்காணித்து, இரவு 10 மணிக்கு தவறாமல் விஜய்க்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

கடந்த சில நாட்களாக, இந்த ஏஜென்சியின் அறிக்கைகளைப் பார்த்து வரும் விஜய், ஒருநாள் ஏஜென்சி நபர்களுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், நிர்வாகிகளின் ஒவ்வொரு செயல்பாட்டையும் விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறார். தனியார் ஏஜென்சியின் அறிக்கைகள் மற்றும் கள நிலவரங்களின் அடிப்படையில், விஜய் கடுமையான முடிவுகளை எடுக்க தயாராகி வருவதாகத் தெரிகிறது. உளவு அறிக்கைகளின் அடிப்படையில், கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலரை மாற்றும் முடிவை விஜய் எடுத்துள்ளாராம். விரைவில் அவர்களின் பதவி பறிக்கப்படும் அல்லது அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர்கள் நியமனம், கூட்டணிகள் மற்றும் கட்சியின் செயல் திட்டங்கள் அனைத்தும் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே இனிமேல் இருக்கும் என்பதை விஜய் உறுதி செய்துள்ளதாகவும், நிர்வாக மட்டத்தில் இனி தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் நம்பப்படுகிறது.

தவெக தலைவர் விஜய், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தொடங்குவதற்கு முன், உட்கட்சிப் பூசல்களை களைந்து, நம்பகமான நிர்வாக கட்டமைப்பை உருவாக்க தீவிரமாக முயன்று வருகிறார் என்பது இந்த சம்பவங்கள் மூலம் தெளிவாகிறது.