நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, தமிழக அரசியல் களத்தில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது. அவர் எதிர்பார்த்ததைவிட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, பத்து பேரில் ஏழு பேர் விஜய்க்கு வாக்களிப்போம் என்று கூறுவதாக தெரிகிறது. இது, தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்று உருவாகிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு ஏன் இந்த ஆதரவு?
தமிழகத்தில் ஒரு வலிமையான எதிர்க்கட்சி இல்லாததே விஜய்க்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆதரவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தி.மு.க.வை வீழ்த்தும் வலிமை விஜய்க்கு மட்டுமே உள்ளது என்று மக்கள் நம்ப தொடங்கியுள்ளனர். மேலும், தி.மு.க.வின் பாரம்பரிய ஆதரவாளர்கள்கூட, விஜய்யின் வருகையால் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு அவருக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் கணிப்புகளும், எதார்த்த நிலையும்
இந்தியா டுடேவின் சி-வோட்டர் கருத்துக்கணிப்பு, தி.மு.க. கூட்டணிக்கு 48% வாக்குகள் கிடைக்கும் என்றும், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறுகிறது. ஆனால், இது பாராளுமன்ற தேர்தலுக்கான கணிப்பு என்றும், சட்டமன்ற தேர்தலுக்கு இது பொருந்தாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சட்டமன்ற தேர்தலில் மக்களின் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொங்கு சட்டமன்றம் அல்லது புதிய ஆட்சி?
வரும் தேர்தலில், ஒன்று விஜய் ஆட்சியை பிடிப்பார் அல்லது எதிர்க்கட்சி தலைவராக வருவார் என்று பரவலாக பேசப்படுகிறது. தி.மு.க. தனித்து 118 என்ற மேஜிக் எண்ணைத் தொடுவது கடினம். 2006-ஆம் ஆண்டுபோல தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தாலும், இம்முறை வெளியிலிருந்து எந்த கட்சியும் ஆதரவு தராது என்றும், அனைவரும் ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தி.மு.க.விற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை, தி.மு.க. கூட்டணியும் வெற்றி பெறாமல், விஜய்யும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், தமிழகம் ஒரு தொங்கு சட்டமன்றத்தை சந்திக்கும். இதனால், தமிழகம் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத திருப்பங்கள், விஜய்யின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதைக் காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
