டெல்லிக்கு தூது அனுப்பிய விஜய்.. ராகுல் காந்தி எடுக்கும் அதிரடி முடிவு.. திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. புது ஃபார்முலாவை கண்டுபிடிப்பு..!

நடிகர் விஜய் கூட்டணிக்காக டெல்லிக்கு தூது விட்டிருப்பதாகவும், இதனை அடுத்து ராகுல் காந்தி ஒரு அதிரடி முடிவை எடுக்க போவதாகவும், இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு புதிய ஃபார்முலா கண்டுபிடிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுவது…

tvk congress.jopg

நடிகர் விஜய் கூட்டணிக்காக டெல்லிக்கு தூது விட்டிருப்பதாகவும், இதனை அடுத்து ராகுல் காந்தி ஒரு அதிரடி முடிவை எடுக்க போவதாகவும், இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு புதிய ஃபார்முலா கண்டுபிடிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை கூட்டணி ஆட்சி என்ற கேள்விக்கே இடமில்லை. 2011 ஆம் ஆண்டு திமுக மைனாரிட்டியாக இருந்தாலும் கூட, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கூட்டணி கட்சிகளிடம் மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை கேட்காமல் தன்னிச்சையாக ஆட்சி அமைத்தார். “எங்களை ஆட்சியில், அதிகாரத்தில் சேர்த்து கொள்ளுங்கள்’ என்று எந்தக் கட்சியும் அன்று தைரியமாக கருணாநிதியிடம் கேட்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அதிமுகவும், திமுகவும் தனி மெஜாரிட்டி பெற்றதால், கூட்டணி ஆட்சி என்ற கேள்வியே எழவில்லை. ஆனால், அனைத்து சிறிய கட்சிகளுக்கும் கூட்டணிகளில் பங்கு கேட்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை வெளிப்படையாகக் கேட்க முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் தான், இந்த “குட்டையை முதன் முதலில் குழப்பி விட்டவர் விஜய் தான்”. விக்கிரவாண்டி முதல் மாநாட்டில், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவோம் என்று அவர் கூறியபின் தான், தூங்கி கொண்டிருந்த மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி ஆட்சி குறித்து பேச ஆரம்பித்துவிட்டன. பாஜக வெளிப்படையாகவே அதிமுகவுடன் எந்தவித ஆலோசனையும் செய்யாமல், “கூட்டணி அரசுதான்” என்று தெரிவித்துவிட்டது. திமுக கூட்டணியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சியில் அதிகாரம் என்பது குறித்து பேச ஆரம்பித்துவிட்டது. புதிய தமிழகம் பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தருகின்றன. எனவே, மொத்தத்தில் கூட்டணி ஆட்சிதான் உருவாகும் என்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் தான், ராகுல் காந்திக்கு விஜய் தூது விட்டிருப்பதாகவும், 50 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு, துணை முதலமைச்சர் உட்பட முக்கிய அமைச்சரவை பதவி என்று அவர் அனுப்பிய தூது, ராகுல் காந்தியை ரொம்பவே யோசிக்க வைத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, திமுக கூட்டணியில் தொடர்வதை விட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்றால், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் ரிஸ்கை எடுக்க ராகுல் காந்தி முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

விஜய் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்தால், பின்னாலேயே விடுதலை சிறுத்தைகள் வந்துவிடும் என்றும், எனவே 2026 ஆம் ஆண்டிலிருந்து திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கூட்டணி ஆட்சி என்ற புதிய ஃபார்முலாவை விஜய் மற்றும் ராகுல் காந்தி தமிழகத்தில் அறிமுகப்படுத்த இருக்கும் நிலையில், இந்த ஃபார்முலா இனிவரும் காலங்களிலும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.