நல்லவனுக்கு அது கோவில் மணி.. கெட்டவனுக்கு அது சாவு மணி.. வேல்முருகன் தவறான இடத்தில் கை வச்சிட்டாரு.. இனிமே சும்மா விடமாட்டோம்.. ராவூத்தர் இப்ராஹிம்

வேல்முருகன் தவறான இடத்தில் கை வைத்து விட்டார் என்றும், அவரை சும்மா விடமாட்டோம்” என்றும், மதுரை மாநாட்டுப் பந்தக்கால் நடத்தும்போது கோவில் மணி அடித்தது, “அந்த மணி நல்லவர்களுக்கு மட்டும் தான் கோவில் மணி,…

vijay ibrahim

வேல்முருகன் தவறான இடத்தில் கை வைத்து விட்டார் என்றும், அவரை சும்மா விடமாட்டோம்” என்றும், மதுரை மாநாட்டுப் பந்தக்கால் நடத்தும்போது கோவில் மணி அடித்தது, “அந்த மணி நல்லவர்களுக்கு மட்டும் தான் கோவில் மணி, கெட்டவர்களுக்கு அது சாவு மணி” என்றும் சமூக வலைத்தளங்களில் அளித்த பேட்டியில் ராவூத்தர் இப்ராஹிம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராவூத்தர் இப்ராஹிமின் ஆவேசப் பேச்சு

சமீபத்தில் அளித்த பேட்டியில் ராவூத்தர் கூறிய போது, “மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தவறான ஒரு கருத்தை தெரிவித்துவிட்டார். அதை கண்டித்து பேசிய என் மீது வேல்முருகன் வழக்கு போட்ட போது, எனக்கு விஜய் அவர்கள் மிகுந்த ஆதரவு கொடுத்தார். இதன் மூலம் நான் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், எனக்கே விஜய் அவர்கள் அந்த அளவுக்கு ஆதரவு கொடுத்தபோது, தவெக தொண்டர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அவர் தனது வழக்கறிஞர் அணிகள் மூலம் காப்பாற்றுவார். இப்படி ஒரு கட்சியின் தொண்டனாக இருப்பது மிகவும் அதிர்ஷ்டம்” என்று தெரிவித்தார்.

“வேல்முருகன் ரொம்ப யோக்கியர் போல் பேசிக்கொண்டிருக்கிறார். தவறான இடத்தில் வேல்முருகன் கை வைத்து விட்டார். குழந்தைகள் மீதும், அதன் தாய்மார்கள் மீதும் கை வைத்தது மிகவும் மோசமானது. இதற்கான விலையை அவர் நிச்சயம் கொடுத்தே தீர வேண்டும். வேல்முருகன் ஒரு கேஸ் போட்டால் நாங்கள் எல்லாம் ஓடி ஒளிந்து விடுவோம் என்று நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால், உங்க அப்பன், தாத்தா எல்லாவற்றையும் பார்த்தவன் நான். அதன்பிறகு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். வேல்முருகன் இல்லை, யாராக இருந்தாலும் இது போன்ற விஷயத்தை செய்தால் அதற்காக நாங்கள் அஞ்சி ஓட மாட்டோம்” என்று தெரிவித்தார்.

வேல்முருகன் மீதான வழக்குகள்

மேலும், “வேல்முருகன் மீது என்னென்ன வழக்குகள் இருக்கிறது என்பதை விசாரித்து வருகிறோம். அவர் மீது இதுவரை பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன, எந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன, அதில் ஆள் கடத்தல், அடிதடி வழக்குகள் இருக்கா, கொலை முயற்சி வழக்குகள் இருக்கா என்பதை விசாரித்து வருகிறோம். டோல்கேட் தகராறு வழக்கை எல்லாம் நாங்கள் தோண்டி எடுப்போம்” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநாடு: விஜய்யின் பிறந்தநாள் மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாள்

மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெறும் நாள், விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளாகவும், தளபதி விஜய்யின் திருமண நாளாகவும் உள்ளது. “விஜய்யின் திருமண நாள் மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகிய இரண்டும் சேர்ந்த நாளில் விஜய் அவர்கள் மதுரைக்குள் வரும்போது, ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ என்கிற மாதிரி கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது மதுரை மக்கள் எந்த அளவுக்குக் கொண்டாடுவார்களோ, அதேபோல் விஜய் மதுரையில் கால் வைக்கும் போது மதுரை மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

தி.மு.க.வுக்கு பெரும் சவால்
“விஜய் ஒரு ஆளுமையுள்ள தலைவர் என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. குழந்தைகளிடம் அவர் காட்டும் அன்பு, குழந்தைகளின் பெற்றோர்களிடம் காட்டும் பாசம் இந்த விஷயத்தை பார்த்துதான் பரம்பரை பரம்பரையாக தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டவர்கள் கூட விஜய்க்கு மாறி ஓட்டளிப்பார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், விஜய் வருகை என்பது தி.மு.க.வுக்குதான் மிகப்பெரிய பேரிடியாக இருக்கும். தி.மு.க. ஓட்டு தான் பாதி ஓட்டு விஜய்க்கு வருகிறது. அதை தாண்டி புதிதான வாக்காளர்கள், 30 சதவீதம் ஓட்டுப் போடாமல் இருந்தவர்கள், பெண்கள் ஓட்டு, இந்த ஆட்சியின் மீது உச்சத்தில் வெறுப்பில் இருக்கும் ஓட்டுகள், பா.ஜ.க. வெறுப்பு ஓட்டுகள் விஜய்க்கு வருகிறது. சிறுபான்மையினர் ஓட்டுக்களும் விஜய்க்கு வருகிறது. எனவே, நிச்சயம் மக்கள் இன்னும் சில மாதங்களில் ‘சாரி ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எங்களை ஆட்சி செய்ய வேண்டாம், வெளியே போங்கள்’ என்று மக்கள் சொல்லும் நாள் விரைவில் வரும்” என்றும் ராவூத்தர் இப்ராஹிம் தெரிவித்தார்.