பள்ளியில் இன்று மாணவர்கள் மேல் கை வைத்தாலே ஆசிரியர் மேல் புகார்கள் பாய்கிறது. ஆனால் அவ்வப்போது மாணவர்களும் சில விஷமத் தனமான காரியங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தினைக் கெடுத்துக் கொள்கின்றனர். புத்தகப் பைகளில் ஆயுதங்கள் எடுத்து வருவது, சாதி ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, செல்போன் மோகத்தால் ரீல்ஸ்கள் எடுப்பது என விரும்பத் தகாத பல காரியங்களைச் செய்து வருகின்றனர். இவர்களை ஆசிரியர்களும், பெற்றோர்களும் கண்டித்து நல்வழிப்படுத்துகின்றனர்.
இருப்பினும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சிலர் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். மேலும் இதனை வீடியோவாகப் பதிவு செய்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இது சந்தேகமோ இல்ல…லவ்-ஆ..? கணவனின் வித்தியாசமான டார்ச்சரில் சிக்கிய மனைவி.. எடுத்த அதிரடி முடிவு..
இந்த வீடியோ வைரலான நிலையில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் பள்ளியில் மாணவிகளிடையே இதுபோன்ற கலாச்சாரம் பெருகி வருவது அதிர்ச்சி அளித்த நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் சென்னை அசோக் நகர் பள்ளியில் ஆன்மீக போதனை வகுப்புகள் எனக்கூறி மகாவிஷ்ணு என்பவர் மாற்றுத்திறனாளிகள் குறித்து சில கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்கினார். மேலும் ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் ஆசிரியர்களின் பாதங்களைக் கழுவி பாத பூஜை செய்தனர். பள்ளிகளில் இதுபோன்று அடுத்தடுத்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வருவதால் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் முறையான நெறிமுறைகளை வெளியிட்டு அதனை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.