வைகோவின் வரலாறு முழுக்க முழுக்க சுயநலம்.. பாஜக கூட்டணியில் மதிமுக.. துரை வைகோவுக்கு மத்திய மந்திரி பதவி.. 2031ல் துரைவைகோ vs உதயநிதி?

“வைகோவின் அரசியல் முழுக்க முழுக்க சுயநலம் என்றும், தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி பெற வேண்டும் என்பதற்காகவே அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்குச் செல்கிறார்” என்றும்…

durai vaiko 1

“வைகோவின் அரசியல் முழுக்க முழுக்க சுயநலம் என்றும், தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி பெற வேண்டும் என்பதற்காகவே அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்குச் செல்கிறார்” என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைகோவின் அரசியல் குறித்த விமர்சனம்
“வைகோவின் பிரச்சனையே அதுதான். இந்தியாவில் ஒரு கட்சியை நடத்தி கொண்டு ‘தமிழீழம் அமைத்தே தீருவேன்’ என்று கூறுவது சட்டப்படி தவறு. இன்னொரு நாட்டில் ஒரு விஷயத்தை சாதிப்பேன் என்று இந்தியாவில் உள்ள ஒரு கட்சி எப்படி வாக்குறுதி அளிக்க முடியும்?” என்றும் பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பி உள்ளார்.

“வைகோவின் அரசியலை நன்கு தெரிந்தவர்களுக்கு அவருடைய இந்த மாற்றம் பெரும் ஆச்சரியத்தை அளிக்காது. அவருடைய அரசியல் வழக்கமே இதுதான். புலிகள் இயக்கம் அழிந்ததும், தமிழீழம் கிட்டத்தட்ட அழிந்ததும்தான் வைகோவின் சாதனை” என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

“பா.ஜ.க.வுடன் வைகோ செல்ல போகிறார் என்று கூறப்பட்டு வருகிறது. தாராளமாக போகட்டும். இது என்ன புதிதா? 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க.வுடன் முதன் முதலில் கூட்டணி வைத்தது வைகோ தான். மோடியை முதல்முதலில் கட்டிப்பிடித்தது வைகோ தன். அதேபோல் முதன் முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியதும் வைகோ தான். ராஜபக்சேவை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்ததால் ஏற்பட்ட மனக்கசப்பில் அவர் கூட்டணிகளிலிருந்து வெளியேறினார்.”

“2026 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. கண்டிப்பாக இருக்காது. இதை நீங்கள் தாராளமாக எழுதி வைத்துக் கொள்ளலாம். இது நம்மை விட வைகோவுக்கு நன்றாகத் தெரியும். கருணாநிதியையும், ஸ்டாலினையும் மிகவும் மோசமாகப் பேசிய வைகோ தான், சில ஆண்டுகளில் மனம் மாறி இருவரையும் வாழ்த்தியும், போற்றியும் பேசினார். கோபாலபுரத்து இளவரசர் என்று உதயநிதியைப் பேசுவதும் வைகோதான். அதைவிட அதிகமாகப் பேசியவர், வரும் தேர்தலில் அப்படியே மாற்றி பேசவும் வாய்ப்பு உண்டு” என்று கூறப்பட்டு வருகிறது.

“தி.மு.க.வில் இருந்து முதன்முதலாக வைகோ வெளியே வந்தபோது ஆறு பேர் அவருக்காக தீக்குளித்தனர். ஆனால், அந்த ஆறு பேரில் மரணத்திற்கு மரியாதை அலிக்காமல் மீண்டும் தி.மு.க.வில் கூட்டணியில் சேர்ந்தபோதே, வைகோ தனது அரசியல் மரியாதையை இழந்துவிட்டார்” என்றும் கூறப்பட்டு வருகிறது.

2019, 2021, 2024 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை அரவணைத்து கொண்டுதான் சென்றார். கூட்டணி கட்சிகளில் இருந்து யாராவது தி.மு.க.வில் சேர விரும்பினால் கூட, அவர் சேர்த்து கொள்வதில்லை. அந்த அளவுக்கு அவர் கூட்டணி கட்சிகளிடம் நாகரீகமாக நடந்து கொண்டார். ஆனால், ம.தி.மு.க.விலிருந்து வெளியே வந்த மூன்று பேரை முதல்வர் ஸ்டாலின் அறிவாலயத்தில் தனது முன்னிலையில் கட்சியில் சேர்த்துக் கொண்டார். அந்த மூவரையும் அழைத்து கொண்டு வந்தது மல்லை சத்யா தான். அப்போதே தெரிந்துவிட்டது தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.வை வெளியேற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார்” என்றும் ஒரு கேள்விக்கு பத்திரிகையாளர் மணி பதிலளித்தார்.

“தற்போது மதிமுகவில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களுக்கு, குறிப்பாக மல்லை சத்யா விவகாரத்துக்கு தி.மு.க. பொறுப்பல்ல” என்று கூறிய பத்திரிகையாளர் மணி, “ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியது மதிமுகவை மனதில் வைத்துதான்” என்றும் கூறினார்.

“அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக அரசியல் ‘வைகோ vs உதயநிதி’ என்று தான் இருக்கும் என்று மதிமுகவினர் கூறி வருவது காமெடியின் உச்சகட்டம்” என்று பத்திரிகையாளர் மணி ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.