தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து பொதுமக்களுக்கான மூன்று வகையான போட்டிகளை அறிவித்துள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலினின் போட்டிகள்’ என்ற தலைப்பில் நடைபெறும் இப்போட்டிகள், புகைப்படம், கட்டுரை மற்றும் வினாடி வினா ஆகிய பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளவும், அவற்றில் பங்கேற்கவும் இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிகளின் விவரங்கள்:
1. புகைப்படப் போட்டி:
இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், முதலமைச்சர் ஸ்டாலினின் உருவம் இடம்பெற்றிருக்கும் விதமாக புகைப்படங்கள் எடுக்க வேண்டும். இந்த புகைப்படங்கள் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற கருப்பொருளை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் JPG அல்லது PNG கோப்பு வடிவத்தில் இருக்க வேண்டும்.’

2. கட்டுரைப் போட்டி:
“உங்களுக்கு பிடித்த திட்டம்” என்ற தலைப்பில் நடைபெறும் இப்போட்டியில், 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உங்களுக்கு பிடித்தமான திட்டங்கள் குறித்து ஒரு பக்க அளவில் கட்டுரை எழுத வேண்டும். இந்த கட்டுரையை ஒரு புகைப்படம் அல்லது PDF கோப்பு வடிவில் சமர்ப்பிக்கலாம்.’

3. வினாடி வினா போட்டி):
இது ஒரு வினாடி வினா போட்டியாகும். செப்டம்பர் 10ஆம் தேதி வரை TNDIPR-ன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்படும் பதிவுகளை அடிப்படையாக கொண்டு 10 முதல் 15 கேள்விகள் கேட்கப்படும். இவற்றிற்கு சரியாக பதிலளிப்பவர்கள் இந்த போட்டியில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
இந்த மூன்று போட்டிகளிலும் கலந்துகொள்ள விரும்புபவர்கள், அந்தந்த போட்டிக்கான அறிவிப்பு சுவரொட்டிகளில் உள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பங்கேற்கலாம். கட்டுரை மற்றும் புகைப்பட போட்டிகளுக்கு unguludanstalinmhc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
