வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, ஒரு கட்சியில் உள்ள பிரபலங்கள் பாதுகாப்பான தொகுதியை தேர்வு செய்வார்கள் என்பதும், வெற்றி உறுதி என்று அறியப்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதும் தெரிந்தது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்பட பல தலைவர்கள் அவ்வாறுதான் இதுவரை போட்டியிட்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, பெரிய தலைவர்களை எதிர்த்து எந்த ஒரு இன்னொரு பெரிய தலைவர்களும் இதுவரை போட்டியிட்டதாக வரலாறு இல்லை. அந்த நிலையில், முதல் முறையாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடப் போவதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சாதாரணமாக, ஒரு தொகுதியில் போட்டியிடுவதில் எந்த விதமான த்ரில்லும் இல்லை என்றும், பிரபலங்கள் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த வகையில் தனக்கு நேர் போட்டியாளராக கருதும் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட அவர் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் வட்டாரங்களில் இந்த தகவல் கூறப்பட்டு வந்தாலும், இது எந்த அளவுக்கு உண்மை என்பதை 2026 ஆம் ஆண்டு தேர்தல் வரும் போது தான் தெரிய வரும்.