உதயநிதி நிச்சயம் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார்..திட்டவட்டமாகச் சொன்ன அமைச்சர் தா.மோ. அன்பரசன்

By John A

Published:

தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் துணை முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் தொழில் முதலீடுகள் குறித்த சுற்றுப் பயணத்தினை முடித்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் திரும்பினார். ஏற்கனவே அமெரிக்கா செல்லும் முன் உதயநிதியை துணை முதலமைச்சராக்கி விட்டு பொறுப்புகளை ஒப்படைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது குறித்து அறிவிப்பிற்கு அமைச்சர்களும் தயாராக இருந்தனர். எனினும் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து உதயதிநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம். என்று பதில் கூறினார்.

இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் நிகழலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திமுகவின் பவள விழாவானது வருகிற செப்டம்பர் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள்.. ஒரு உடலை அடக்கம் செய்ய செலவு கணக்கு எவ்வளவு தெரியுமா?

இது குறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில், “இன்னும் ஒருவாரம் அல்லது 10 நாட்களிலேயே துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பார். பவளவிழாவில் அறிவிப்பு வருமா என்று கேட்டதற்கு நாளையே கூட அறிவிப்பு வரலாம். தயாராக இருக்கிறோம்” என்று பதிலளித்தார் அமைச்சர்.

எனினும் கடந்த சில மாதங்களாகவே துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் திமுகவின் பவளவிழாவில் இதற்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.