யாரு ஜெயிக்கணும்னு மக்கள் முடிவு பண்ணுவாங்க… ஆனா யார் தோற்கணும்னு முடிவு பண்றது விஜய்யின் தவெக தான்.. கை வந்தா தவெக இரட்டை பலம் பெறும்… கை வராட்டியும் பரவாயில்லை.. காங்கிரஸை நம்பி விஜய் வரல… மக்களை நம்பி மட்டும் தான் இருக்காரு.. 2026-ல விஜய் காலடி எடுத்து வைக்கும் போது, கோட்டை யாருக்குன்னு வரலாறு சொல்லும்! இது விஜய்யின் அரசியல் ஆதிக்கம்!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் அவர்களின் சமீபத்திய நேர்காணல் பல அதிரடி தகவல்களைத் தந்துள்ளன. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம்…

thuglak ramesh

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் அவர்களின் சமீபத்திய நேர்காணல் பல அதிரடி தகவல்களைத் தந்துள்ளன. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் , காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கிடையிலான கூட்டணி சமன்பாடுகள் குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கள் தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தற்போது தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். பத்திரிகையாளர் ரமேஷ் அவர்களின் கூற்றுப்படி, வெவ்வேறு தனியார் ஏஜென்சிகள் எடுத்த கருத்துக்கணிப்புகளில் சுமார் 40 முதல் 50 தொகுதிகளில் தவெக இரண்டாம் இடத்தை பிடிக்கும் எனத் தெரியவந்துள்ளது. பல இடங்களில் அதிமுகவை மூன்றாம் இடத்திற்குத் தள்ளி, திமுகவிற்கு நேரடி போட்டியாக தவெக உருவெடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஏற்பட்டுள்ள எழுச்சியே இதற்கு காரணம். காங்கிரஸ் போன்ற ஒரு தேசிய கட்சி தவெகவுடன் இணைந்தால், அந்த பலம் இரட்டிப்பாகும். அவ்வாறு கூட்டணி அமையாவிட்டாலும் கூட, பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் தவெக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தற்போது ஒரு பெரும் புதிராகவே நீடிக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கருதினாலும், அடிமட்ட தொண்டர்கள் மற்றும் சில மாவட்ட தலைவர்கள் “மாற்று முடிவு” எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். திமுக ஆட்சியினால் காங்கிரஸிற்குப் பெரிய அளவில் பலனில்லை என்ற அதிருப்தி அவர்களுக்குள் நிலவுகிறது.

தவெக தரப்பிலிருந்து ஒரு தேசிய கட்சி தங்களோடு இணையப்போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால் தமிழகம் வந்து சென்ற பிறகு, ராகுல் காந்தியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக ஏற்க மறுக்கும் பட்சத்தில், காங்கிரஸ் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளது. அவ்வாறு காங்கிரஸ் ‘கை’ கோர்த்தால், தவெகவின் வெற்றி வாய்ப்பு பல தொகுதிகளில் பிரகாசமாகும்.

திமுக தலைமையிலான கூட்டணி தற்போது ‘இண்டாக்ட்’ ஆக இருப்பதாக கூறப்பட்டாலும், உள்ளுக்குள் பல சலனங்கள் இருப்பதை துக்ளக் ரமேஷ் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக, அமைச்சர்கள் மீதான லஞ்ச ஊழல் வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தின் தலையீடு திமுகவிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

தேர்தல் நேரத்தில் இத்தகைய வழக்குகள் தங்களை முடக்க முடியாது என்று திமுக கூறினாலும், 41 தொகுதிகளுக்கு பொறுப்பேற்றுள்ள ஒரு மூத்த அமைச்சர் சட்ட சிக்கலில் சிக்கியிருப்பது கட்சியின் தேர்தல் பணிகளை பாதிக்கும். மேலும், தவெகவின் எழுச்சி திமுகவின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தே, திமுக தலைமை காங்கிரஸை தக்கவைக்கப் போராடி வருகிறது. தவெகவை அண்டர் எஸ்டிமேட் செய்வது ஆபத்தானது என்பதை உளவுத்துறை தகவல்கள் மூலம் திமுக தலைமை ஏற்கனவே அறிந்து வைத்துள்ளது.