தவெக ஒரு அலை அல்ல.. சுனாமி.. மொத்த அரசியல் கட்சிகளையும் சுருட்டி வார போகிறது.. கூட்டணிக்குள் வந்தா தப்பிச்ச.. இல்லாட்டி சங்குதான்..!

தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு குறிப்பிட்ட ‘அலை’ தோன்றி, ஏதாவது ஒரு பிரதான கட்சியை புரட்டிப் போடுவது வழக்கம். ஆனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக்…

tsunami

தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு குறிப்பிட்ட ‘அலை’ தோன்றி, ஏதாவது ஒரு பிரதான கட்சியை புரட்டிப் போடுவது வழக்கம். ஆனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஒரு சாதாரண அலை அல்ல, அது ஒரு சுனாமி என்றும், அது தமிழக அரசியல் களத்தின் மொத்த சமன்பாட்டையும் மாற்றியமைக்கப் போகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த கால தேர்தல் அலைகளின் உதாரணங்கள் என்று பார்த்தால் தமிழக தேர்தல் வரலாற்றில் ‘அலைகள்’ ஏற்படுத்திய தாக்கங்கள் பல உண்டு:

1991 தேர்தல்: ராஜீவ் காந்தியின் படுகொலை, திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி, அதிமுகவுக்கு அசுர வெற்றியைத் தேடி தந்தது.

1996 தேர்தல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஒற்றை ‘வாய்ஸ்’, அதிமுக ஆட்சியை கவிழ்த்து திமுகவுக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

2001 தேர்தல்: 1996 இல் திமுகவுடன் கூட்டணி வைத்த தமிழ் மாநில காங்கிரஸ், 2001 இல் அதிமுகவுடன் கைகோர்த்தது. தமிழ் மாநில காங்கிரஸ் மட்டுமல்லாமல், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் அதிமுக கூட்டணியில் இருந்ததால், இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 2001 இல் திமுக கூட்டணியில் பாஜக சேர்ந்தது, திமுகவுக்கு படுதோல்வியை ஏற்படுத்தியது.

2006 தேர்தல்: ‘கலைஞர் டிவி’ என்ற ‘இலவச வண்ணத் தொலைக்காட்சி’ என்ற திமுகவின் அறிவிப்புகள் அதிமுகவை புரட்டி போட்டு, திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தன.

2011 தேர்தல்: திமுக ஆட்சியின் மீதான அராஜக குற்றச்சாட்டுகள், அதிமுகவுக்கு சாதகமான அலையை உருவாக்கி, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்தன.

2016 தேர்தல்: பெரிய அலை இல்லை என்றாலும், அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார்.

2021 தேர்தல்: எந்த ஒரு தெளிவான அலையும் இல்லை என்றாலும், ‘ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்’ என்ற மனநிலையில் மக்கள் வாக்களித்ததால், திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.

‘தமிழக வெற்றிக் கழகம்’ – ஒரு சுனாமி!

இந்த நிலையில், மற்ற தேர்தல்களைப் போலவே 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு ‘அலை’ என்று மட்டுமே கணிப்பது தவறு என்று கூறப்படுகிறது. “இது அதிமுக அல்லது திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு அலை அல்ல. தமிழக வெற்றிக் கழகம் ஒரு சுனாமி; மொத்த கட்சியையும் வாரிச்சுருட்ட போகிறது என்பதுதான் உண்மை” என்று அரசியல் விமர்சகர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

கூட்டணி அரசியலில் தாக்கம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கூட்டணியில் ஏதேனும் கட்சி வந்தால், அந்த கட்சிகள் ‘ஜாக்பாட்’ அடித்தது போல் பெரும் லாபம் அடையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் இந்த புதிய சக்தி, பாரம்பரிய கட்சிகளின் தேர்தல் வியூகங்களை முழுமையாக மாற்றியமைக்கும் திறன் கொண்டது என நம்பப்படுகிறது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஏற்படுத்தும் தாக்கம், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.