மதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்

சென்னை: மதில்சுவர் தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முடித்து வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில்…

Trisha's case related to the dispute with the neighbor is settled in high court

சென்னை: மதில்சுவர் தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முடித்து வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை திரிஷா 25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் ஹீரோயினாக நடித்து வருகிறார். திரிஷா அண்மையில் பொன்னியின் செல்வன் – 1&2, லியோ, தி கோட் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார் 40 வயதை கடந்துவிட்ட த்ரிஷா, 90களில் , 80களில் பிறந்தவர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் இவ்வளவு காலம் ஹீரோயினாக தொடர்ந்து நடிப்பது நடிகர்களுக்கே சாத்தியமில்லாத சூழலில், திரிஷா திகழ்வது உண்மையில் அசாத்தியமான ஒன்றாகும். நடிகை திரிஷா சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். சென்னையில் வீடு இருக்கிறது.

சென்னை செனடாப் ரோடு இரண்டாவது வீதியில் தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில், பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி, நடிகை திரிஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காரமன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகை திரிஷா தரப்பிலும், எதிர் தரப்பிலும், பிரச்னை
இரு தரப்பிலும் சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காரமன், நடிகை திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.