41 குடும்பங்களே விமர்சனம் செய்யவில்லை.. வேடிக்கை பார்க்கும் உங்களுக்கு என்ன பிரச்சனை? விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது இதற்காக தான்.. 41 குடும்பங்களையும் விஜய் தத்தெடுத்துள்ளார்.. திருச்சி சூர்யா சிவா பேட்டி..!

சமீபத்தில், கரூரில் நடந்த அசாம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களின் 41 குடும்பங்களையும் அழைத்து, மகாபலிபுரத்தில் விஜய் ஆறுதல் கூறியது தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாகியுள்ளது. “வெளியில் 4 குடும்பம், 5 குடும்பம் வரவில்லை என்று சொல்வதெல்லாம்…

trichy surya siva

சமீபத்தில், கரூரில் நடந்த அசாம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களின் 41 குடும்பங்களையும் அழைத்து, மகாபலிபுரத்தில் விஜய் ஆறுதல் கூறியது தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாகியுள்ளது.

“வெளியில் 4 குடும்பம், 5 குடும்பம் வரவில்லை என்று சொல்வதெல்லாம் உண்மை கிடையாது. 41 குடும்பங்களும் கலந்துகொண்டதாகவே த.வெ.க. தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு குடும்பம் மட்டும்தான் திரும்ப பணத்தை கொடுத்ததாக சொல்லி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது” என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த திருச்சி சூர்யா சிவா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பணம் திரும்ப கொடுத்ததாகச் சொன்ன பெண்மணி, ஆரம்பத்தில் ‘என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் செல்லவில்லை’ என்று கூறிவிட்டு, பின்னர் ‘என் கணவரின் அக்கா மற்றும் சித்தப்பா உள்ளிட்டோர் சென்றனர்’ என்று முரண்பாடாக பேசியதைக்குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பஸ்ஸில் இருந்து இறங்கும் காட்சிகள் எந்த செய்தி சேனலிலும் தெளிவாக காட்டப்படவில்லை. எனவே, “ஊடகத்தை பார்த்துதான் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள் என்று தெரிந்துகொண்டேன்” என்று அந்த பெண் கூறியது பொய் என்றும், அவர் தி.மு.க. ஆதரவு ஊடகங்களின் பின்புலத்தில்தான் பேசியுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

மன்னிப்புக் கேட்டது ஏன்?: “அவர் சம்பந்தம் இல்லை என்றால் ஏன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்?” என்ற கேள்விக்கு, “சட்டத்தின் பார்வையில் அவர் குற்றவாளி இல்லை என்றாலும், ‘நம்மை பார்க்க வந்ததால்தான் இந்த அசாம்பாவிதம் நடந்தது’ என்ற குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாகவே அவர் மன்னிப்பு கேட்டார்” என்று சூர்யா சிவா பதிலளித்தார்.

விஜய் வெறும் பணத்தை மட்டும் கொடுக்கவில்லை; அவர் மொத்த குடும்பத்தையும் தத்தெடுத்துள்ளார். கடன்களை அடைப்பது, குழந்தைகளின் முழு படிப்பு செலவை ஏற்றுக்கொள்வது, திருமண செலவைப் பொறுப்பேற்பது, பழுதடைந்த வீடுகளை புதுப்பித்துக் கொடுப்பது போன்ற உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

“எந்தக் குடும்பத்தில் இழப்புகள் ஏற்பட்டதோ, அவர்களே அமைதியாக அவர் கூப்பிட்ட இடத்துக்கு போக தயாராக இருக்கிறபோது, வேடிக்கை பார்க்கிற உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?” என்று விமர்சனம் செய்பவர்களை பார்த்து சூர்யா சிவா கேள்வி எழுப்பினார்.

விஜய் முதலில் கரூரில் தான் குடும்பங்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால், தி.மு.க.வின் அழுத்தத்தால் மண்டப உரிமையாளர் மிரட்டப்பட்டு, அட்வான்ஸ் தொகையை திரும்ப கொடுத்துவிட்டார். காவல்துறையும் அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தியதால், விஜய் கரூருக்கு செல்லவில்லை என்றும், இதுவே கரூர் நிகழ்வு ரத்தானதற்கு காரணம் என்றும் சூர்யா குறிப்பிட்டார்.