“கடைசியில யார் ஃபர்ஸ்ட் வர்றாங்கன்னு தான் முக்கியம்”..திமுக எடுத்த சர்வேயில் விஜய்க்கு 30% வாக்குகள்..விஜய் இல்லாவிட்டால் அதிமுக கூட்டணி ஜெயிக்க முடியாது.. துக்ளக் ரமேஷ் அதிர்ச்சி தகவல்..

  தி.மு.க.வினர் எடுத்த சர்வே, அகில இந்திய சர்வே நிறுவனம் எடுத்த சர்வே, தமிழகத்தை சேர்ந்த சர்வே நிறுவனம் ஒன்று எடுத்த சர்வே என மூன்று சர்வேக்கள் விஜய்யின் ஆதரவு குறித்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில்…

vijay

 

தி.மு.க.வினர் எடுத்த சர்வே, அகில இந்திய சர்வே நிறுவனம் எடுத்த சர்வே, தமிழகத்தை சேர்ந்த சர்வே நிறுவனம் ஒன்று எடுத்த சர்வே என மூன்று சர்வேக்கள் விஜய்யின் ஆதரவு குறித்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் குறைந்தபட்சம் 15 சதவீதம், அதிகபட்சம் 30 சதவீதம் விஜய்க்கு வாக்குகள் கிடைக்கும் என ரிசல்ட் வந்துள்ளதாகவும், இதனால் தி.மு.க. அதிர்ச்சியில் இருப்பதாகவும் துக்ளக் ரமேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வே முடிவுகளைப் பார்த்து தி.மு.க. அச்சப்பட்டு கொண்டிருக்கிறது என்றும், வாக்குகள் சிதறிக் கொண்டிருப்பதைத் தடுப்பதற்காகத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் இன்னொரு கேள்விக்கு துக்ளக் ரமேஷ் பதில் அளித்தார்.

ஒன்றுபட்ட அ.தி.மு.க., பா.ஜ.க., ஒன்றுபட்ட பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய நான்கு கட்சிகள் கூட்டணி இருந்தால் மட்டுமே தி.மு.க.வை ஜெயிக்க முடியும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் விஜய் இல்லாமல் அ.தி.மு.க. கூட்டணி ஜெயிக்க முடியாது என்றும் துக்ளக் ரமேஷ் மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்தார்.

“தமிழக அரசியல் களம் என்பது இதுவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இரண்டு துருவங்கள் மட்டும்தான் இருந்தது. ஆனால், தற்போது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு சமமாக தமிழக வெற்றிக்கழகம் வந்துவிட்டது என்றும், மூன்று முனைப் போட்டி என்பது மூன்று சமமான கூட்டணிகளுக்கு இடையிலான போட்டி” என்றும் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடமே ஆகிய நிலையில், விஜய்யின் கட்சி, 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் செய்து கொண்டிருக்கும் கட்சிகளுக்கு இணையான வாக்குகளை பெறுகிறது என்று சர்வேக்கள் மூலம் பெறப்படும் தகவல் பல அரசியல் வியூக நிபுணர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தேர்தலில் மக்கள் ஒரே பக்கமாக விஜய் பக்கம் சாய்கிறார்கள் என்று ஏற்கனவே பல நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில், துக்ளக் ரமேஷ் இக்கருத்தையே தெரிவித்துள்ளார். மொத்தத்தில், தி.மு.க.வுக்குப் பெரும் சவாலாக விஜய் இருப்பார் என்றும், அவரை குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதை தி.மு.க. இப்போதுதான் புரிந்துகொண்டது என்றும் கூறப்பட்டு வருகிறது.