திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் மட்டும் வெளியேறிவிட்டால், அந்த கூட்டணி நிச்சயம் தோல்வியடையும் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணி ஒவ்வொரு முறையும் கூட்டணியின் அரவணைப்பால் மட்டுமே வெற்றி பெற்று வருகிறது என்பதும், இதுவரை திமுக கட்சி ஆரம்பித்ததிலிருந்து ஒருமுறை கூட கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டதாக வரலாறு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டணி இருந்தாலுமே 5 வருடத்திற்கு ஒருமுறை தோல்வியை தான் கடந்த சில ஆண்டுகளாக திமுக சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்த முறை கூட்டணி கட்சியினர் யாராவது வெளியேறினால், திமுக கூட்டணிக்கு தோல்வி நிச்சயம் என்றும் பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக ஆட்சியில் நடக்கும் சில விஷயங்களை வேறு வழியில்லாமல் கண்டு கொள்ளாமல் இருக்கும் திருமாவளவன், ஒரு கட்டத்தில் திமுகவை எதிர்க்க தயங்க மாட்டார் என்றும், குறிப்பாக ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் இணைவோம் என்று கூட்டணிக்கு திருமாவளவன் செக் வைத்தால், கண்டிப்பாக திமுக கூட்டணி அதற்கு ஒப்புக் கொள்ளாது என்றும், அதனால் திருமாவளவன் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறினால் காங்கிரஸ் கட்சியும் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸ் மற்றும் திருமாவளவன் ஆகிய இரண்டு கட்சிகளும் விஜய் மற்றும் சீமான் கூட்டணியில் இணைந்தால், திமுக–அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தோல்வி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.