2026ல் ஒரு தேர்தல் அல்ல.. இரண்டு தேர்தல்கள்.. 2வது தேர்தலில் விஜய் ஆட்சியை பிடிப்பார். தமிழக அரசியலில் முதல்முறை நடக்கும் ஆச்சரியம் கலந்த அதிசயம்..!

தமிழக அரசியல் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளால் பரபரப்பு கூடியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சி, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.…

vijay 2 1

தமிழக அரசியல் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளால் பரபரப்பு கூடியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சி, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டில் விஜய் ஒரு முக்கிய அரசியல் முடிவை அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு தமிழகத்தின் எதிர்கால அரசியலையே மாற்றியமைக்கக்கூடும் என்று தேர்தல் வியூக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி: விஜய்யின் அதிரடி அறிவிப்பு

மதுரை மாநாட்டில் விஜய் வெளியிடவிருக்கும் முக்கிய அறிவிப்பு, “எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை; தனித்து போட்டி” என்பதாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒருவேளை உண்மையாகும் பட்சத்தில், தமிழக அரசியல் களம் முற்றிலுமாக மாறும். விஜய்யின் இந்த முடிவு, தமிழக வெற்றிக் கழகம் ஒரு தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்க விரும்புகிறது என்பதை காட்டுகிறது. இதன் மூலம், அக்கட்சி திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியல் அடையாளத்தை உருவாக்க முயல்கிறது.

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஒரு பலமான கூட்டணியாக தொடர்ந்து செயல்படும். மறுபுறம், அதிமுக, பாஜக கூட்டணியில் வேறு எந்த கட்சிகளும் இணைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. சீமான் தனித்து போட்டியிடுவார் என்றும், தேமுதிக, பாமக திமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், விஜய் தனித்து போட்டியிடும் முடிவால், திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் இடையே நேரடி போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொங்கு சட்டமன்றமும், மறு தேர்தலும்: தமிழக வரலாற்றில் முதல்முறை?

இந்த சூழ்நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த வியூக கணிப்பாளர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். விஜய்யின் தனித்து போட்டி, வாக்குகளை பிரிக்கும். இதனால், எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்காது என்றும், தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தொங்கு சட்டமன்றம் என்றால், எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காது. இது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நிகழ்வாக இருக்கும். தேர்தலுக்கு பிறகு, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விஜய் மறுத்துவிட்டால், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் மேலும் சிக்கலாகும். இதன் விளைவாக, தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்த நிலை, தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தை தொடங்கும். விஜய், ஒரு புதிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டால் மறுதேர்தலில் அவருடன் கூட்டணி அமைக்க முக்கிய கட்சிகள் ஆர்வம் காட்டும். அந்த புதிய கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என அரசியல் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.