தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக கோலோச்சி வரும் திராவிட கட்சிகள், தற்போது ஒரு புதிய சவாலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு, கள நிலவரம் முற்றிலும் மாறியிருப்பதை முக்கிய அரசியல் கட்சிகள் ரகசியமாக நடத்தும் கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கிய திராவிட கட்சி எடுத்து வரும் ரகசிய சர்வே முடிவுகளில், விஜய்யின் வாக்கு சதவீதம் ஒரு இடத்தில் கூட குறையாமல் நிலையாக இருப்பதும், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதும் அக்கட்சிகளின் தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. எத்தனையோ அரசியல் நெருக்கடிகளை கையாண்ட அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கூட, விஜய்யின் இந்த மௌனமான வளர்ச்சியை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
விஜய்யின் அரசியல் அணுகுமுறை மற்ற தலைவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதுதான் எதிர்தரப்பினருக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. பொதுவாக ஒரு அரசியல் தலைவர் ஏதாவது பேசினால், அதில் உள்ள வார்த்தைகளை திரித்தோ அல்லது சிதைத்தோ அவரை சிக்கலில் மாட்டிவிடுவது வழக்கமான அரசியல் தந்திரம். ஆனால் விஜய் எதற்கும் அவசரப்படாமல், தேவையற்ற விவாதங்களில் சிக்காமல் மௌனம் காப்பது எதிரிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது. “அவர் பேசினாலாவது எதையாவது பிடித்து அரசியல் செய்யலாம், ஆனால் பேசவே மாட்டேங்குறாரே” என்பதே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களின் தற்போதைய புலம்பலாக உள்ளது.
ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர்கள், நேற்று அரசியலுக்கு வந்த ஒருவரால் நிலைகுலைந்து போயிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாகும். விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் திட்டமிடப்பட்ட ஒரு திரைக்கதை போல துல்லியமாக இருப்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அனுபவம் வாய்ந்த அரசியல் ஜாம்பவான்களை, தனது அமைதியாலேயே கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வித்தையை விஜய் மிக லாவகமாக செய்து வருகிறார். இது வெறும் சினிமா பிரபல்யத்தால் வந்த கூட்டமல்ல, மாறாக திராவிடக் கட்சிகளின் வழக்கமான அரசியலில் சலிப்படைந்த மக்களின் திரட்சி என்பதை ரகசிய சர்வே முடிவுகள் உரக்க சொல்கின்றன.
விஜய்யை அரசியலில் இருந்து எப்படி ஓரங்கட்டுவது என்பது குறித்து திராவிட கட்சிகளின் உயர்மட்ட குழுக்களில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பழைய பாணி விமர்சனங்கள், தனிநபர் தாக்குதல்கள் போன்றவை விஜய்யிடம் எடுபடவில்லை என்பது அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அவரை ஒரு ‘சீரியஸ்’ அரசியல்வாதியாக மக்கள் ஏற்றுக்கொண்டதுதான் திராவிட கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தோல்வி. விஜய்யின் வாக்கு வங்கியை சிதைக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவது அதிகார வர்க்கத்தை கலக்கமடைய செய்துள்ளது.
மறுபுறம், இந்த அரசியல் மாற்றத்தை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் கவனித்து வருகின்றனர். நீண்ட காலமாக இரண்டு துருவ அரசியலுக்குள்ளேயே சிக்கிக்கிடந்த தமிழகத்திற்கு, ஒரு வலுவான மாற்று சக்தி உருவாகிறது என்ற நம்பிக்கை மக்களிடையே துளிர்விட்டுள்ளது. திராவிட கட்சிகள் பதற்றமடைவதை பார்த்து மக்கள் ரசிக்க தொடங்கியுள்ளனர். “நேற்று வந்தவர் இவர்களை இப்படி ஆட்டிப் படைக்கிறாரே” என்ற பேச்சு சாமானிய மக்கள் மத்தியில் பரவலாக ஒலிக்கிறது. இது ஒரு தனிநபருக்கான ஆதரவு மட்டுமல்லாமல், ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான தேடலாகவும் பார்க்கப்படுகிறது.
முடிவாக, 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய விஜய்யின் பயணம் திராவிட கட்சிகளின் தூக்கத்தை கலைத்துள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சர்வே முடிவுகள் தரும் நெருக்கடியும், விஜய்யின் கணிக்க முடியாத மௌனமும் அரசியல் களத்தில் ஒரு பெரிய புயலுக்கு முன்னால் உள்ள அமைதியை போலவே காட்சியளிக்கிறது. ஐம்பது ஆண்டு கால அரசியலை ஒரு நடிகர் தனது வியூகத்தால் அசைத்து பார்ப்பது தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. இந்த அரசியல் ஆட்டத்தில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதை தேர்தல் களம் தீர்மானிக்கும் என்றாலும், தற்போதைக்கு விஜய் மற்ற கட்சிகளை ஓடவிட்டு கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
