கூட்டம் வராதான்னு ஏங்கிகிட்டு இருந்த அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தானா சேர்ந்த கூட்டம்.. பொறாமை இருக்கத்தான செய்யும்.. விஜய் குறித்து திடீரென மாறிய விமர்சகர்கள்..!

கூட்டம் வராதா என்று ஏங்கி கொண்டிருந்த அரசியல்வாதிகள் மத்தியில், பிரியாணியும் பணமும் கொடுத்து கூட்டத்தை கஷ்டப்பட்டு கூட்டி கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், ஒரு அரசியல்வாதிக்கு தானாக கூட்டம் சேருகிறது என்றால் மற்ற அரசியல்வாதிகளுக்கு பொறாமை…

vijay

கூட்டம் வராதா என்று ஏங்கி கொண்டிருந்த அரசியல்வாதிகள் மத்தியில், பிரியாணியும் பணமும் கொடுத்து கூட்டத்தை கஷ்டப்பட்டு கூட்டி கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், ஒரு அரசியல்வாதிக்கு தானாக கூட்டம் சேருகிறது என்றால் மற்ற அரசியல்வாதிகளுக்கு பொறாமை ஏற்படுவது இயல்பு. நேற்று நடந்த அஜித் குமார் மரணத்திற்கான கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விஜய் வந்தவுடன், கடல் அலை போல் கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல, மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

“பனையூரில் மட்டுமே அரசியல் செய்கிறார், களத்தில் வரமாட்டார் என்கிறார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்று விஜய் மீது வைக்கப்பட்ட ஒரே விமர்சனமும் நேற்று உடைபட்டுவிட்ட நிலையில், நேற்றைய கூட்டத்தில் அவரை பார்ப்பதற்கும், அவருடைய பேச்சை கேட்பதற்கும் கூடிய கூட்டத்தை பார்த்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி, தமிழக மக்களும் ஆச்சரியப்பட ஆரம்பித்துவிட்டனர். விஜய் ஒரு நடிகர் என்பதை இப்போது மக்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்டு, மக்களுக்கான தலைவர் என்று யோசிக்க தொடங்கிவிட்டனர்.

விஜயின் அரசியல் பாதை: கணிப்புகளும், விமர்சனங்களும்

இதுவரை விஜய் குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் கூட, “விஜய் இப்போதுதான் சரியான பாதையை தேர்வு செய்திருக்கிறார். இதே பாதையில் சென்றால் அவரது அரசியல் எதிர்காலம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்” என்று கூறி வருகின்றனர். இன்னும் தேர்தலுக்கு எட்டு மாதம் இருக்கும் நிலையில், இந்த எட்டு மாதத்தில் விஜய் சூறாவளி பிரச்சாரம் செய்தால், அனைத்து அரசியல் கட்சிகளும் தவிடு பொடியாகிவிடும் என்றுதான் விமர்சனங்கள் இருந்து கொண்டு வருகின்றன.

அரசியலில் எந்த ஒரு கட்சியும் அவர்களுடைய தொண்டர்களால் மட்டுமே வெற்றி பெற முடியாது. நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் தான் 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கும். அந்த வாக்காளர்கள் யார் பக்கம் சாய்கிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெற முடியும். எனவே, என்னதான் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஒரு அரசியல் கட்சி அதிகமாக காட்டினாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யாமல் இருக்கும் நடுநிலை வாக்காளர்கள் கடைசி நேரத்தில் யார் பக்கம் சாய்கிறார்களோ, அவர்கள்தான் ஆட்சிக்கு வருவார்கள். இதுதான் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அரசியலில் உள்ள தேர்தல் முறையாகும்.

அப்படித்தான் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்த மக்கள், வேறு வழியில்லை என்று இரண்டில் ஒரு கட்சியை மாறி மாறி தேர்வு செய்து வந்த நிலையில், தற்போதுதான் மூன்றாவது அணியாக ஒரு விடிவெள்ளியாக விஜய் கட்சி மக்கள் கண்ணுக்கு தெரிகிறது. அந்த நடுநிலை வாக்காளர்களின் வாக்குகளை மொத்தமாக விஜய் அள்ளிவிட்டால், அவர் நினைத்த ஆட்சித் தலைவர் வந்துவிடும் என்றுதான் அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

சவால்களும், எதிர்பார்ப்புகளும்

ஆனால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஐந்து ஆண்டுகள் பதவியை அனுபவித்த கட்சியும், இதற்கு முன்னர் பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவி அனுபவித்த கட்சியும் அவ்வளவு லேசில் விஜய் கையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட மாட்டார்கள். அடுத்தடுத்து என்னென்ன திட்டங்கள் நடக்கப்போகிறது, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார தந்திரங்கள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Vijay’s Protest for Ajith Kumar’s Death Draws Massive Crowd: Sparks Political Buzz!