தீயாய் பரவிய தமிழ்த்தாய் வாழ்த்து போட்டி.. 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கிடைச்சா விடுவாங்களா?

By John A

Published:

தஞ்சாவூர் : சென்னையில் நேற்று முன்தினம் டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்ற இந்தி தின விழாவில் ஆளுர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது அதில் இடம்பெறும் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்..’ என்ற வரியானது புறக்கணிக்கப்பட்டது.

இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. திட்டமிட்டு இவ்வரிகள் புறக்கணிக்கப்பட்டதாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கு டிடி தொலைக்காட்சி நிலையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. எவ்ளோ தெரியுமா?

இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழையின்றி பாடுபவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டது. தஞ்சையில் உள்ள ஜோதி என்ற தனியார் தொண்டு நிறுவனம் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இதனைக் கேள்விப்பட்டவர்கள் சாரை சாரையாக போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த பகுதிக்கு விரைந்தனர்.

மேலும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் ஹெல்மெட் அணிந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையின்றி பாடுபவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டதால் பலரும் அங்கு திரண்டனர்.

வாகன ஓட்டிகள் பலர் இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு 2 லிட்டர் பெட்ரோலை நிரப்பிச் சென்றனர். இந்தப் போட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது.