தமிழக காங்கிரஸின் மூத்த தலைவராக பார்க்கப்பட்ட மறைந்த குமரி ஆனந்தனின் மகள் தமிழிசை சௌந்தர்ராஜன். இவர் ஒரு மருத்துவர். ஆனால், அரசியலில் ஆர்வம் ஏற்பட்டதால் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.. கடந்த பல வருடங்களாகவே பாஜகவில் இருக்கிறார்.. சில வருடங்கள் தமிழக பாஜக தலைவராகவும் இருந்திருக்கிறார்..
சில வருடங்களுக்கு முன்பு அந்த பதவி எல்.முருகனுக்கு கொடுக்கப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜனுக்கு தெலுங்கானா ஆளுநராக பதவி கொடுக்கப்பட்டது.. ஆனால் எனக்கு தமிழக அரசியல் களத்தில் செயல்படவே பிடிக்கும் என சொல்லிவிட்டு அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது தமிழக பாஜகவில் செயல்பட்டு வருகிறார்..
கடந்த பல வருடங்களாகவே திமுகவை விமர்சனம் செய்து வரும் தலைவர்களில் தமிழிசை சௌந்தர்ராஜன் முக்கியமானவர். அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து திமுகவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், இன்று பாஜக தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் தமிழிசை.
அதன்பின் அந்த கூட்டத்தில் பேசிய தமிழிசை ‘நான் உள்ளே வரும்போது அம்மா வந்துட்டாங்கன்னு சிலர் சொல்றாங்க.. தமிழ்நாட்டிற்கு ஒரே அம்மாதான் இருக்க முடியும்.. அது ஜெயலலிதா அம்மாதான்.. என்னை அக்கா என்றால் கூப்பிட்டால் போதும்’ என கோரிக்கை வைத்தார்..

