பெண்களுக்கே டஃப் கொடுத்த திருநங்கைகள்; மிஸ் கூவாகம் 2023 அழகியா சென்னை திருநங்கை தேர்வு!

By Amaravathi

Published:

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

18 நாள் நடைப்பெறும் திருவிழா இந்தாண்டு கடந்த 18ஆம் தேதி சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மும்பை, பெங்களூர் புனே, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் விழுப்புரத்தில் ஒரு வாரம் தங்கி மகிழ்ச்சியாக இருந்து விட்டு செல்வார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகளுக்கான விழுப்புரத்தில் “மிஸ் கூவாகம் அழகி போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம் இந்த ஆண்டு போட்டி நேற்று இன்றும் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற அழகி போட்டியில் 45 திருநங்கைகள் பங்கேற்று அதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கான அழகி தேர்ந்தெடுப்பதற்கான போட்டி இன்று காலை விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருநங்கைகள் வண்ண வண்ண ஆடை அணிந்து மேக்கப் அணிந்து சினிமா மற்றும் பக்தி வேடமிட்டு நடனமாடி அசத்தினர். அதனைத் தொடர்ந்து அழகி போட்டியானது நடைபெற்றது அப்போது 16 திருநங்கைகளும் வண்ண வண்ண ஆடை உடுத்தி அலங்காரம் செய்து கொண்டு மேடையை அலங்கரித்து வந்தனர். இதனை தொடர்ந்து அதில் இரண்டாம் சுற்று ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டு அந்த ஏழு பேர்களுக்கும் பொது அறிவு மற்றும் எய்ட்ஸ் நோய் விழிப்புணர் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன .

FvHMbdIX0AQNVC9

அதன் அடிப்படையில் சிறப்பாக பதில் அளித்த மற்றும் அழகு, ஆடை, பாவனை இவற்றில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் “சென்னை நிரஞ்சனா 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ வும் மாவட்ட செயலாளர் புகழேந்தி கிரீடம் மற்றும் பட்டையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தை சென்னை டிஷா வும், மூன்றாம் இடத்தை சேலம் சாதனாவும் தட்டி சென்றனர். இவர்களுக்கும் பட்டயம் மற்றும் கேடயம் அணிவிக்கப்பட்டது மிஸ் கூவாகம் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கை அழகிகளுக்கு சக திருநங்கைகள் வாழ்த்து கூறி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மாலை திருநங்கைகளின் முக்கிய திருவிழாவான கூத்தாண்டவர் கோவில் அரவானை கணவானக நினைத்து திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது