தோல்வி பயம் திமுகவுக்கு வந்துவிட்டது.. விஜய் 30 சதவீதத்திற்கு மேல் ஓட்டை அள்ளிட்டு போறாரு.. அதிமுக இடத்தை பிடித்துவிட்டது தவெக..

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், இப்போதே தமிழக ஊடகங்கள், இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் ஆகியவை அரசியல் விமர்சகர்கள், அரசியல் வியூக நிபுணர்கள், மூத்த பத்திரிகையாளர்களிடம் தேர்தல் குறித்த பேட்டிகளை…

vijay stalin

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், இப்போதே தமிழக ஊடகங்கள், இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் ஆகியவை அரசியல் விமர்சகர்கள், அரசியல் வியூக நிபுணர்கள், மூத்த பத்திரிகையாளர்களிடம் தேர்தல் குறித்த பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பி வருகின்றன. பெரும்பாலான பேட்டிகள் விஜய்யை மையப்படுத்தியே அமைந்துள்ளன. ஒன்று விஜய்யை ஆதரித்து பேசுபவர்கள் அல்லது விஜய்யை எதிர்த்து பேசுபவர்கள் என இருதரப்பினரும் அதிகமாக பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், தினமும் கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு பேட்டிகளை தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிகையாளர் மணி, “தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. விஜய் தமிழகம் முழுவதும் 20% வாக்குகளைப் பெறுவார். சில பகுதிகளில் 30% வாக்குகளை அவர் அள்ளி செல்கிறார்” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், “அ.தி.மு.க.வின் இடத்தை கிட்டத்தட்ட விஜய் பிடித்துவிட்டார்” என்று ஏற்கனவே பல பத்திரிகையாளர்கள், தேர்தல் வியூக நிபுணர்கள் கூறிய நிலையில், அதை பத்திரிகையாளர் மணியும் ஆதரிக்கின்றார்.

“எதிர்க்கட்சியாக இருந்து செய்ய வேண்டிய எந்த பணியையும் அ.தி.மு.க. செய்யவில்லை. அ.தி.மு.க. இந்துத்துவா கொள்கையை கையில் எடுத்து திராவிட பாரம்பரியத்தை இழிவு செய்கிறது” என்றும் அவர் கூறினார். ஆனால், அதே நேரத்தில், “விஜய் சரியாக ஒரு எதிர்க்கட்சியை போல நடந்து கொள்கிறார். அவர் போராட்டத்தின் போது மூன்று நிமிடங்கள் மட்டும் பேசினாலும், அவர் முக்கியமான எல்லாவற்றையும் பேசிவிட்டார். அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரு தமிழக மக்களும் கேட்க வேண்டிய கேள்விகள்” என்றும் அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில், “ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. விஜய்யின் அபரிமிதமான வளர்ச்சியை தி.மு.க. எதிர்பார்க்கவில்லை. விஜய் ஒரு பக்கம் சவால் என்றால், கஸ்டடி இறப்புகள் இன்னொரு பக்கம் தி.மு.க.வுக்கு பெரும் சவால்” என்றும் மணி தெரிவித்தார். “விஜய் ஆட்சியை பிடிக்கிறாரோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக எதிர்க்கட்சியாக வருவார்.

ஏற்கனவே பாதி அ.தி.மு.க.வை பா.ஜ.க. ஆக்கிரமித்துவிட்ட நிலையில், மீதியையும் ஆக்கிரமித்து அ.தி.மு.க.வை ஒன்றும் இல்லாமல் செய்துவிடும். ஆனால், எதிர்க்கட்சி என்ற பொறுப்பை ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் ஏற்றால், கண்டிப்பாக பொறுப்புடன் அந்த பணியைப் பார்க்கும்” என்று பல தேர்தல் வியூக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே, மொத்தத்தில், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் ஆளுங்கட்சியாக வருவாரா அல்லது எதிர்க்கட்சியாக வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.