சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு, ‘சைபர் விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் போஸ்டர் வடிவமைப்பு மற்றும் ரீல்ஸ் உருவாக்கும் போட்டியை நடத்துகிறது. இதில் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி பரிசுகளை வெல்லலாம்.
போட்டியின் முக்கிய அம்சங்கள்: போட்டியில் பங்கேற்பவர்கள், சைபர் குற்றங்கள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளை உருவாக்கலாம்.
தலைப்புகள்: சைபர் மிரட்டல் (Cyber Bullying), தனிநபர் தரவு பாதுகாப்பு (Privacy), ஆன்லைன் மோசடிகள் (Online Scams) போன்றவை.
படைப்பு வடிவம்: டிஜிட்டல் போஸ்டர் அல்லது ரீல்ஸ்.
பங்கேற்பது எப்படி: மேலே குறிப்பிட்ட தலைப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து, அதற்கேற்றவாறு ஒரு டிஜிட்டல் போஸ்டர் அல்லது ரீல்ஸ் உருவாக்க வேண்டும்.
அந்த படைப்பை, உங்களின் மூன்று சமூக ஊடகப் பக்கங்களில் (Facebook, Instagram, அல்லது X) கவர்ச்சிகரமான வாசகத்துடன் பகிர வேண்டும்.
படைப்பை பகிரும்போது, தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் அதிகாரப்பூர்வ கணக்கான @tncybercrimeoff-ஐ டேக் செய்ய வேண்டும்.
கடைசி நாள்: செப்டம்பர் 11, 2025.
பரிசு விவரங்கள்: இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மதிப்புமிக்க ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
முதல் பரிசு: ரூ.10,000 (3 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு: ரூ.5,000 (3 வெற்றியாளர்கள்)
மூன்றாம் பரிசு: ரூ.3,000 (10 வெற்றியாளர்கள்)
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், அதேசமயம் பரிசுகளை வெல்லவும் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, போட்டி அறிவிப்பில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
