சென்னை தாம்பரம்- கோவை இடையே வார இறுதியில் சிறப்பு ரயில்..தெற்கு ரயில்வே குட்நியூஸ்

By Keerthana

Published:

சென்னை: தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த ரயில் புறப்படும் என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை கோவைக்கு சிறப்பு ரயில் சென்றடையும்.

ஒவ்வொருவார இறுதியிலும் , தாம்பரம், செங்கல்பட்டு பகுதி மக்கள் ரயில் ஏற சென்டரல் வரை செல்ல வேண்டும். இதேபோல் தென்சென்னை பகுதி மக்களும் சென்னை சென்டரலுக்கு சென்று ஏற வேண்டும். ஏனெனில் தாம்பரத்தில் இருந்து கோவை செல்ல அவ்வளவாக ரயில்கள் இல்லை.. ஒரு சில ரயில்களே உள்ளன.

இந்நிலையில் வாரஇறுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக அடுத்த ஒரு மாதத்திற்கு தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. ஆயுத பூஜை மற்றம் தீபாவளியை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 6 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருபாத்திபுலியூர் (கடலூர்), சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஒட்டன்சந்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர்(கோவை) ஆகிய ரயில் நிலையங்களில் நின்று கோவை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 8.10க்கு சென்றடையும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை கோவைக்கு சிறப்பு ரயில் சென்றடையும். மறுமார்க்கமாக ஞாயிறு அன்று இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் திங்கள் அன்று மதியம் 12.30க்கு இந்த ரயில் தாம்பரம் வரும்” என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.