திரையுலகில் உதவி இயக்குனர், இயக்குனர், நடிகர் என வலம் வந்த சீமான் 2010ம் வருடம் நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி தமிழக அரசியலில் களமாடி வருகிறார்
. தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் சீமான் திராவிடத்தை தூக்கிப் பிடிக்கும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார். இதனால் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்களும் சீமானை விமர்சிப்பதுண்டு..
எந்த காரணத்தை கொண்டும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் சீமான். விஜய் கட்சி துவங்கியதும் தன்னுடன் கூட்டணி அமைப்பார் என சீமான் எதிர்பார்த்தார். ஆனால், அவரும் திராவிடத்தை தூக்கி பிடித்ததால் கோபமடைந்த சீமான் விஜயையும் திட்ட துவங்கினார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் கூட நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம்.
அதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.. சீமானின் இந்த முடிவு நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது..

