முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விஜய் மனைவி சங்கீதா

By Keerthana

Published:

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் இன்று காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை முரசொலி செல்வம் உயிரிழந்தார். அவரதுஉடலுக்கு நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் முரசொலி செலவ்ம். 1941-ம் ஆண்டு ஏப்ரலில் பிறந்த இவருக்கு, நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வத்தின் நினைவாக, பன்னீர்செல்வம் என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயர் சூட்டினார். நாளடைவில் இந்த பன்னீர்செல்வம் என்ற பெயர் மறைந்து, முரசொலி செல்வம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. கருணாநிதியின் அக்கா மகன், முரசொலி மாறனின் தம்பி, கருணாநிதியின் மகள் செல்வியின் கணவர், முதல்வர் ஸ்டாலினின் மாமா என்ற குடும்ப உறவுகள் இருந பின்னணியையும் தாண்டி, முரசொலி செல்வம் திமுகவில் முக்கியமானவராக இருந்தார். ஏனெனில் முரசொலி நாளிதழை இவர் தான் நடத்தி வந்தார்.

தாய்மாமாவான கருணாநிதியின் மகள் செல்வியை முரசொலி செல்வம் திருமணம் செய்து கொண்டார். பல்வேறு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் முரசொலி செல்வம். முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற தலைப்பில் நீண்ட ஆணித்தரமான கட்டுரைகளை முரசொலி செல்வம் தான் எழுதி வந்தார். செல்வி – முரசொலி செல்வம் தம்பதியினருக்கு எழிலரசி ஜோதிமணி என்ற மகள் உள்ளனர்.

பெங்களூரில் இன்று காலை முரசொலி நாளிதழுக்காக கட்டுரை எழுதியவர், அப்படியே கண் அயர்ந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை முரசொலி செல்வம் உயிரிழந்தார்.

இன்று மாலை பெங்களூரில் இருந்து சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு முரசொலி செல்வம் உடல் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முரசொலி செல்வம் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.

அமைச்சர் துரைமுருகன், வைகோ, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினரை கட்டியணைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். மறைங்நத முரசொலி செல்வம் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.