EB | ஒரே இரவில் மாறிய காட்சிகள்.. மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

By Keerthana

Published:

சென்னை: ஒரே இரவில் காட்சிகள் மாறி உள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் அடிப்படையில், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 300 சதுர மீட்டர் மற்றும் 14 மீட்டர் உயரத்துக்குள் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை என தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

அதிக உயரமில்லாத அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயா்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று கடந்த மாா்ச் மாதம், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 ச.மீ. என்றிருந்ததை அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 ச.மீ. என அரசு திருத்தம் செய்தது.

இந்நிலையில் அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. அதேபோல், அதிக உயரமில்லாத கட்டடங்களை பொருத்தவரை, அந்தக் கட்டடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயா்த்தப்பட்டது. இதே சலுகை வணிகக் கட்டடங்களுக்கும் தமிழக அரசு அளித்தது, இதற்காக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளா்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்; தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி! தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற ‘கட்டிட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை.

* 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள்.

* 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடு

* 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்கள்

* அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள்

இந்த உத்தரவின் மூலம் மாநகர பகுதிகளில் பல ஆயிரம் பேர் இனி பயன் பெறுவார்கள். இவர்களுக்கு உடனடியாக மின்சார இணைப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.