டமார் என வெடித்த பிரிட்ஜ்.. அதிகாலையில் மதுரையை அதிர வைத்த சம்பவம்.. பறிபோன 2 உயிர்கள்..

Published:

மதுரையில் இன்று அதிகாலை பெண்கள் விடுதியில் பிரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை, பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இங்கு அலுவலகம், கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள் உள்பட சுமார் 45 பேர் வரை தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை இங்கு பலத்த சப்தத்துடன் பிரிட்ஜ் வெடித்தது.அப்போது ஏற்பட்ட தீ விபத்தாலும் கரும்புகை சூழ்ந்ததாலும் உள்ளே தங்கியிருந்த சில பெண்கள் மாட்டிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!

இவ்விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சில பெண்கள் மூச்சுத் திணறல் மற்றும் காயம் ஏற்பட்டவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக விடுதியில் இருந்த அனைத்துப் பெண்களும் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விடுதியை காலி செய்யக் கோரி கடந்த ஆண்டே மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அதனை மீறி விடுதி செயல்பட்டது. இந்நிலையில் விடுதியை நடத்தி வந்த இன்பா என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்று பிரிட்ஜ் வெடிப்பதற்கான காரணம் குறித்தும், பராமரிப்பு குறித்தும் பிரிட்ஜ் மெக்கானிக் கூறுகையில், “பொதுவாக பிரிட்ஜ் வெடிக்கும் நிகழ்வு என்பது அரிதானது. அதிக அழுத்தம் மற்றும் வாயு தடைபட்டு வெளியேறாத சூழ்நிலை இருந்தால் மட்டுமே இவ்வாறு நிகழும். தற்போது இன்வெர்ட்டர் பிரிட்ஜ்கள் தான் விற்பனைக்கு வருகிறது. எனினும் அவ்வப்போது பிரிட்ஜ் திறந்து நன்றாகத் துடைத்து வைக்க வேண்டும். பிரிட்ஜில் உள்ள வயர்களை எலி கடித்திருக்கிறதா எனவும், வயர் அறுந்திருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

ஓடாமல் பல நாட்களுக்குப் பிறகு இயக்கும் பிரிட்ஜை பயன்படுத்தும் முன்பு மெக்கானிக்கை வரவழைத்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பகலில் ஜன்னல்கள் மற்றும் கதவினைத் திறந்து வைத்தே ஃபிரிட்ஜை ஆன் செய்ய வேண்டும்.

மேலும் உங்களுக்காக...