தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி தெளிவாக தெரிகிறது என்றும், பிரதமர் பாஜகவின் அரசியல் வியூகங்களால் ஒருநாள் தமிழகத்தில் தாமரையை மலர செய்யும் என்றும் அரசியல் பார்வையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்களான அமித் ஷா, அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கிடையே ஒரு அரசியல் புரிதல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “திமுகவை வேரோடு சாய்ப்போம்” என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், கட்சியின் வளர்ச்சியை நோக்கியே தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இருவரும் வெவ்வேறு வழிகளில் சென்றாலும், அவர்களின் இலக்கு ஒன்றுதான்.
சமீபத்தில், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது ஒரு மனமாற்றமாக அல்லாமல், அரசியல் களத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் ஒரு வியூகமாக பார்க்கப்படுகிறது. இந்த ஒருமித்த பார்வை, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ரங்கராஜ் பாண்டே கூறினார்.
அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே, “பாஜக ஆட்சியில் அமர போவதை விஜய் பார்க்கத்தான் போகிறார்” என்று கூறியிருப்பது, தமிழகத்தில் பாஜக அடைந்து வரும் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. பாஜகவுக்கு உறுதியான வெற்றி கிடைக்கும் என்று உடனடியாகக் கணிக்க முடியாவிட்டாலும், தமிழகத்தில் அதன் வளர்ச்சி தெளிவாக தெரிகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அத்துடன், அ.தி.மு.க.வுடனான கூட்டணியும், பாஜகவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
