மேலும் இந்த தேர்தலில் முதல் முறையாக ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவருமே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக-பாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் கண்டிப்பாக குரல் கொடுப்பார் என்றும், பிரச்சாரம் செய்ய அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும், ’96 ஆம் ஆண்டு வெளியிட்ட வீடியோ’ போல், 2026லும் அவர் ஒரு வீடியோவை வெளியிடுவார் என்றும், அதில் எதிரணியை சரமாரியாக தாக்கி பாஜக அணிக்கு முழு ஆதரவு தருவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதே போல், கமல்ஹாசன் கிட்டத்தட்ட திமுக கூட்டணியில் இணைந்து விட்ட நிலையில், அவருக்கு ’ராஜ்ய சபா தொகுதி’ மட்டுமின்றி சில சட்டமன்ற தொகுதிகளும் கிடைக்கும் என்றும், அதனால் அவர் தீவிரமாக திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ’தமிழக வெற்றிக்கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய், தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்வார் என்பதும், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளை சரமாரியாக அவர் விமர்சனம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.
எனவே முதல் முறையாக தமிழ் திரை உலகின் மூன்று மாஸ் நடிகர்கள் தேர்தல் களத்தில் இறங்க போவதாகவும், மூவரும் மூன்று திசைகளில், மூன்று கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதால், அதனால் இந்த தேர்தலில் பரபரப்பான காட்சிகளை பார்க்கலாம் என்றும், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.