சென்னையில் உயரப் போகும் சொத்து வரி.. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..

By John A

Published:

சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயம் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக சொத்து வரி கடந்த 2022-ல் உயர்த்தப்பட்டது. அதில் வணிக பயன்பாட்டிற்கு 100 சதவீதமும், கல்வி மற்றும் தொழிற்சாலை இடங்களுக்கு 75% வரியும் உயர்த்தப்பட்டது. மேலும் இது மண்டலங்களைப் பொறுத்து வேறுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி சட்டங்களுக்கு உட்பட்டு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சியில் 6% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்து வரியில் 600 சதுர அடிக்கு 50% – 56% சதவீதமாகவும், 601 – 1200 சதுர அடி வரை 75%லிருந்து 81% ஆகவும், 1201-1800 சதுர அடி வரை 100% லிருந்து 106% ஆகவும், 1800 சதுர அடிக்கு மேல் 150%லிருந்து 156% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியூட்சுவல் ஃபண்ட் SIP கட்டி வரும் நிலையில் கூடுதலாக முதலீடு செய்யலாமா?

இதுமட்டுமன்றி சென்னையில் இனி பொது இடங்களில் குப்பைகள் கட்டிடக் கழிவுகளைக் கொட்டினாலும், எரித்தாலும் ரூ. 5000 அபராதமும், அனைத்து வகையான கடைகளிலும் குப்பைக் கூடை, குப்பைத் தொட்டி இல்லை என்றால் ரூ. 1000 அபராதமும் விதிக்கவும மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 5-ம் தேதி சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நகர பஞ்சாயத்து இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி நிர்வாக இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க்ப்பட்ட நிலையில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.