பஸ்ஸில் இருந்த பிஞ்சுக் குழந்தைகள்.. ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. உயிரைக் கொடுத்து பிஞ்சுகளின் உயிர்காத்த கடவுள்..நிவாரணத் தொகை வழங்கிய அரசு

By John A

Published:

திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர் சேமலையப்பன். காங்கேயத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தினமும் பள்ளி வேனை எடுப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு வந்து காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றி பள்ளியில் விட்டுவிட்டு மாலை மீண்டும் வேனை எடுத்திருக்கிறார்.

அப்போது சிறிது தூரம் சென்றவுடன் அவருக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் பஸ்ஸில் பிஞ்சுக்குழந்தைகள் உள்ளனர் என்பதை எண்ணி வேனை சாலையின் ஓரமாக நிறுத்தியிருக்கிறார். மேலும் நெஞ்சுவலி அதிகமாகவே மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்திருக்கிறது. இதே வேனில் அவரது மனைவியும் இவருக்கு உதவியாளராகப் பணிபுரிகிறார்.

தன் உயிர் போகும் நிலையிலும் பஸ்ஸில் இருந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு சிறு காயம் கூட ஏற்படக் கூடாது என எண்ணி சாலையோரம் பாதுகாப்பாக வேனை துரிதமாக நிறுத்தி தன் உயிரை விட்டிருக்கறார் சேமலையப்பன். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ரத்தமாரே..ரத்தமாரோ.. பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

மேலும் தன்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருந்த போதும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக அவரது குடும்பத்திற்கு அரசு தரப்பிலிருந்து நிவாரணம் தர வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்துச் செத்தவர்கள் குடும்பத்திற்கு 10 இலட்சம் கொடுப்பீங்க.. குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய சேமலையப்பனுக்கும் அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் வேண்டும் 10 இலட்சம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகியது.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த சேமலையப்பனுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5இலட்சம் நிவாரணமும் வழங்கப்பட்டது. இதனை இன்று காலை அமைச்சர் நேரில் சென்று சேமலையப்பன் பெற்றோரிடம் வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.