பிரசாந்த் கிஷோர் சொன்னது விஜய்க்கும் பொருந்தும்.. ஒன்று விஜய் ஆட்சியை பிடிப்பார், அல்லது ஜீரோ ஆவார்.. இரண்டில் ஒன்று தான் நடக்கும்.. கிங் மேக்கராக வாய்ப்பு இல்லை… காங்கிரஸ், விசிக விஜய் பக்கம் வந்தால் வெற்றிக்கு வாய்ப்பு.. இல்லையேல் ஜீரோ தான்..பிரபல பத்திரிகையாளர்களின் கணிப்பு..

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிலவும் சூழல் குறித்து பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் கணிப்புகள் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன. குறிப்பாக,…

vijay prasanth

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிலவும் சூழல் குறித்து பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் கணிப்புகள் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பிரசாந்த் கிஷோர் ஒரு தெளிவான பார்வையை முன்வைத்துள்ளார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய், அரசியலில் கால் பதித்திருப்பது ஒரு ‘புதிய நம்பிக்கை’ என்று ஒருபுறம் வர்ணிக்கப்பட்டாலும், தேர்தல் களம் அவருக்கு அத்தனை எளிதாக இருக்காது என்பதே நிதர்சனம்.

பிரசாந்த் கிஷோர் பீகார் தேர்தலின்போது தனது கட்சியின் முக்கிய கணிப்பு என்னவென்றால், ஒன்று ஆட்சியை பிடிப்பேன், அல்லது ஜீரோ ஆவேன் என்பது தான். அவர் கணித்தபடியே ஜீரோ ஆனார். அதேபோல் விஜய் 2026 தேர்தலில் “ஒன்று ஆட்சியை பிடிக்க வேண்டும் அல்லது பூஜ்ஜியமாக வேண்டும்” என்பதுதான் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களின் கணிப்பாக உள்ளது. அதாவது, இம்முறை தேர்தல் களத்தில் ‘கிங் மேக்கர்’ ஆவதற்கு தமிழக அரசியலில் இடமில்லை. மக்கள் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்குவார்கள் என்பதால், விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில் அவர் ஒரு மிகப்பெரிய அலையை உருவாக்கி ஆட்சியை பிடிக்க வேண்டும்; இல்லையேல் அவர் ஒரு சிறிய வாக்கு சதவீதத்துடன் ஒதுங்க வேண்டிய சூழல் ஏற்படும். இடையில் ஒரு சில இடங்களை வென்று மற்ற கட்சிகளின் தயவில் ஆட்சியில் பங்கு பெறுவது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என பத்திரிகையாளர்களின் கணிப்பாக உள்ளது.

விஜய்யின் பலம் என்பது அவரது இளைய தலைமுறை வாக்கு வங்கி மற்றும் இதுவரை எந்த அரசியல் கறையும் படியாத அவரது பிம்பம். ஆனால், வெறும் ரசிகர் மன்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு 234 தொகுதிகளிலும் திமுக – அதிமுக போன்ற வலுவான கட்டமைப்புகளை கொண்ட கட்சிகளை வீழ்த்துவது கடினம். பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு அளித்த முக்கிய ஆலோசனைகளில் ஒன்று, கட்சியின் கட்டமைப்பை அடிமட்டம் வரை வலுப்படுத்துவது. அதேசமயம், விஜய் தனித்து நிற்பதுதான் அவரது நீண்டகால அரசியலுக்கு நல்லது என்று கிஷோர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தாலும், தேர்தல் வெற்றியை உறுதி செய்ய ஒரு வலுவான கூட்டணி அவசியம் என்பதையும் மறுக்க முடியாது.

அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் விஜய் பக்கம் வரும் பட்சத்தில், அது திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலவீனமாகவும், விஜய்க்கு மிகப்பெரிய பலமாகவும் மாறும். குறிப்பாக, சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை என்ற கோட்பாடுகளில் உடன்பாடு உள்ள இந்த கட்சிகள் தவெகவுடன் கைகோர்த்தால், அது ஒரு மெகா கூட்டணியாக உருவெடுக்கும். அவ்வாறு ஒரு கூட்டணி அமையும் பட்சத்தில் மட்டுமே விஜய்யால் ‘தமிழக மாடல்’ என்ற தனது கனவை நனவாக்கி ஆட்சியை பிடிக்க முடியும். இல்லையேல், வாக்குகள் சிதறி அது இறுதியில் திமுகவுக்கே சாதகமாகிவிடும்.

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசும் பல பத்திரிகையாளர்கள், அவர் வெறும் ‘சினிமா கவர்ச்சி’யை மட்டும் நம்பி இருக்கக்கூடாது என்று எச்சரிக்கின்றனர். ஆந்திராவில் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலை, தமிழகத்தில் விஜயகாந்த், கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட நிலையை அவர்கள் உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றனர். பல லட்சம் ரசிகர்கள் இருந்தும் தேர்தல் களத்தில் வாக்குகள் விழாமல் போனது ஸ்டார் நடிகர்களின் அரசியல் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அதேபோல், விஜய்யும் சுற்றியிருப்பவர்கள் கொடுக்கும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை மட்டும் நம்பி தேர்தலை அணுகினால், அது ஏமாற்றத்தில் முடியக்கூடும். எதார்த்தமான அரசியல் கள ஆய்வு அவருக்கு மிகவும் அவசியம்.

இறுதியாக, 2026 தேர்தல் என்பது விஜய்யின் அரசியல் வாழ்வை தீர்மானிக்கும் ஒரு ‘வாழ்வா சாவா’ போராட்டமாகவே இருக்கும். 2026-ல் தமிழக மக்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியை தொடரப் போகிறார்களா அல்லது விஜய்யின் ‘தமிழக மாடல்’ ஆட்சிக்கு வாக்களிக்க போகிறார்களா என்பதில்தான் விஜய்யின் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளது.