2 அமைச்சர்கள் பதவி காலி.. இன்னும் சில அமைச்சர்கள் பதவிக்கு ஆபத்தா? தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு சிக்கல்..!

  திமுக அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படும் நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேபோல், அமைச்சர் பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும்…

ponmudi senthil1

 

திமுக அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படும் நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதேபோல், அமைச்சர் பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில அமைச்சர்களின் பதவியும் ஆட்டம் கண்டிருப்பதாக கூறப்படுகிறது.

வேலை வாங்கி தருவதாக கூறப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், ஜாமீன் கிடைத்த அடுத்த நாளே அவர் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதே அவர் அமைச்சராக இல்லை, அதனால் சாட்சியத்தை கலைக்க மாட்டார் என்ற அடிப்படையில்தான் என்றும், ஆனால் ’உங்களுக்கு ஜாமீன் கொடுத்து நாங்கள் பெரிய தவறு செய்து விட்டோம்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதியே கடுமையுடன் கூறியுள்ளார்.

’பதவியா அல்லது அமைச்சர் பதவியா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறிய நிலையில், செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளார். அதனால் அவர் அமைச்சர்கள் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், சைவம் வைணவம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அவருக்கு திமுகவில் உள்ளவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கனிமொழி மிக கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்ததால், அவர் முதலில் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது அமைச்சரவையில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அமைச்சர் துரைமுருகன் மீது சொத்து குவிப்பு வழக்கு இருக்கும் நிலையில், அந்த வழக்கும் அவருக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. ஏற்கனவே கே என் நேருவின் மகன் மற்றும் சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்ததும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அடுத்தடுத்து திமுக அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் இன்னும் ஒரு வருடமே இருப்பதால், அந்த கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.