கெட்டவனை அழிக்கனும்ன்னா என்ன வேணும்னாலும் செய்யலாம்..! அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்? பேச்சுவார்த்தையில் இறங்கிய பவன் கல்யாண்.. மாறுகிறதா விஜய் மனம்?

பாஜகவை தனது கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டதால், அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் சேர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், பாஜக இல்லாத அதிமுகவில் விஜய் இணைய வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான ரகசிய பேச்சுவார்த்தை…

vijay pawan

பாஜகவை தனது கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டதால், அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் சேர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், பாஜக இல்லாத அதிமுகவில் விஜய் இணைய வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான ரகசிய பேச்சுவார்த்தை கூட நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

2026 தேர்தலை பொறுத்தவரை, அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் அளவுக்கு வலுவாக இல்லை. அதேபோல், புதிதாக களமிறங்கி, முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிப்பது என்பது விஜய்க்கு தமிழகத்தை பொருத்தவரை சவாலான காரியம். ஆனால் அதே நேரத்தில், அதிமுகவும் விஜய்யும் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி நிச்சயம் என்று தான் கூறப்பட்டு வருகிறது. எனவே, இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாமல் தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவுடன் விஜய் சேர வேண்டும் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் விஜய் யோசிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அதிரடியாக பவன் கல்யாண் இந்த விஷயத்தில் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் கொள்கைகளில் எதெல்லாம் தமிழகத்திற்கு ஒத்துவராவோ, அந்த கொள்கைகளை எல்லாம் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை பாஜக கொடுக்கும் என்றும், குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி தமிழக மக்களின் நலனுக்காக மட்டும் செயல்படும் வகையில் பாஜகவும் மத்திய அரசும் உறுதிமொழி கொடுக்கும் என்றும், எனவே அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் தாராளமாக சேரலாம் என்றும் பவன் கல்யாண் ஐடியா கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி தான் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு கொடுத்தார். அப்போது ஐந்து வருடம் வாஜ்பாயின் அரசு நல்லாட்சி கொடுத்தது. அதேபோல் இப்போதும் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் சேரலாம் என்றும், தமிழகத்திற்கும், தமிழகத்தில் உள்ள மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் மத்திய அரசால் மற்றும் பாஜகவால் ஏற்படாது என்ற வாக்குறுதியை பவன் கல்யாண் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பவன் கல்யாணின் இந்த பேச்சுவார்த்தை விஜய் மனதை மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், அதிமுக தரப்பிலும், “பாஜகவுக்குத் தனியாக ஒரு 34 தொகுதியை ஒதுக்கிவிடுவோம், மீதமுள்ள 200 தொகுதிகளில் நாம் இருவரும் போட்டியிடலாம். பாஜகவின் 34 தொகுதிகளில் நாம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம். எனவே, பாஜகவுடன் கூட்டணி இருப்பது போன்றும் இருக்கும், இல்லாதது போன்றும் இருக்கும்” என்ற ஐடியாவை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், விஜய் மனம் தற்போது அதிமுக கூட்டணியை நோக்கி செல்வதாகக் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதளங்களின் ஊகங்கள் தான் என்றும், முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் விஜய் இருப்பதால், அவர் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதையும், கெட்டவனை அழிக்கனும்ன்னா என்ன வேணும்னாலும் செய்யலாம் என நம் புராணத்திலேயே கூறியிருக்கும் நிலையில், விஜய் ஒரு நல்ல முடிவை எடுப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.