பட்டா டூ ரேஷன் கார்டு.. விஏஓ முதல் தாசில்தார் வரை.. கோவையில் 15 நாளில் நடக்கும் சூப்பர் விஷயம்

கோவை: வருவாய்த்துறையால் வழங்கப்படும் பட்டா மாறுதல், ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் அதிகபட்சம், 15 நாட்களில் தாலுகா அலுவலகங்கள் வாயிலாகவும், அதேபோல் ஆன்லைன் முறையிலும் 15 நாட்களில் வாங்கி கொள்ளலாம். இதற்கான…

Patta name change in Coimbatore in just 15 days and vao, tahsildar officers good news

கோவை: வருவாய்த்துறையால் வழங்கப்படும் பட்டா மாறுதல், ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் அதிகபட்சம், 15 நாட்களில் தாலுகா அலுவலகங்கள் வாயிலாகவும், அதேபோல் ஆன்லைன் முறையிலும் 15 நாட்களில் வாங்கி கொள்ளலாம். இதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் எனவே அரசின் சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் பெறுவதற்கு “சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கைவைத்து வருகிறார்கள்.

ஏனெனில் அரசின் சேவைகளை, ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’ மூலம் குறிப்பிட்ட கால வரன்முறையில் பெற முடியும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லையென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும், இந்த அபராதத் தொகை சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கவும், குறித்த காலத்துக்குள் சேவையளிக்கத் தவறிய அலுவலர்கள் தண்டிக்கவும்முடியும். ஆனால் என்ன காரணத்திற்காக இன்று வரை சட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்பது தெரியவில்லை..

இந்த சூழலில் வருவாய்த்துறையால் வழங்கப்படும் பட்டா மாறுதல், ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் அதிகபட்சம், 15 நாட்களில் தாலுகா அலுவலகங்கள் வாயிலாக, ஆன்லைன் முறையில் வெறும் 15 நாட்களில் வாங்கி கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது .

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறுகையில் , தமிழக அரசின் நில வருவாய்த்துறை கமிஷனரின் உத்தரவுப்படி, வருவாய்த்துறை சார்ந்த பணிகளை வேகமாக முடித்து, மக்களுக்கு அதன் பலன் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்ற, கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகா தாசில்தார்கள் மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

வருவாய்த்துறை சார்ந்த 26 சான்றிதழ்கள், ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்ட நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு, சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். ஒருவேளை சான்றிதழ் இணைக்காவிட்டால், அதற்கான காரணங்களையும், தேவையான ஆவணங்களையும் இணைக்க வலியுறுத்தியுள்ளோம். ஆன்லைனில் சான்றிதழ் வழங்கப்பட்டாலும், விசாரணை செய்வதற்காக நேரில் அழைத்து லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். ஆதாரப்பூர்வமான புகார்கள் மீது, நிர்வாக ரீதியான விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போலியான புகார்கள் கொடுப்போர் மீதும், நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

பட்டா மாறுதல், பெயர் மாற்றம் – 15 நாட்களும், ரேஷன் கார்டு – 30 நாட்களும், வாரிசுச் சான்றிதழுக்கு 15 நாட்களும், உட்பிரிவு செய்தல்- – 30 நாட்களும், இறப்புச் சான்றிதழ் – 7 நாட்களும், வருவாய் சான்றிதழ்- – 15 நாட்களும், ஜாதிச்சான்றிதழுக்கு 7 நாட்களும் மின் இணைப்பு- 14 நாட்களும், குடிநீர் இணைப்புக்கு 7 நாட்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.