சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு.. எடப்பாடி மட்டும் இரண்டே இரண்டு ஓகே சொன்னால் திமுக கூட்டணி சிதறும்.. செய்வீர்களா? பழ கருப்பையா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு, விஜய்யை கூட்டணியில் சேர்த்தால், நடப்பதே வேறு என்றும், அந்த கூட்டணிக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் வந்துவிடும் என்றும், தமிழகத்தில் ஒரு…

eps1

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு, விஜய்யை கூட்டணியில் சேர்த்தால், நடப்பதே வேறு என்றும், அந்த கூட்டணிக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் வந்துவிடும் என்றும், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடக்கும் என்றும் பழ. கருப்பையா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பழ. கருப்பையா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், “தி.மு.க.வுடனும், பா.ஜ.க.வுடனும் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்பதை விஜய் உறுதியாக சொல்லிவிட்டார். ஆனால், அ.தி.மு.க. குறித்து அவர் எதுவும் சொல்லாததால், அவர் அ.தி.மு.க.வுக்காக தனது கதவை திறந்து வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

இனிமேல் எடப்பாடி பழனிசாமி தான் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். அவர் மட்டும் பா.ஜ.க.வை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டு விஜய்யை கூட்டணியில் சேர்த்தால், அதன்பின் இந்த கூட்டணிக்கு தி.மு.க.வில் உள்ள அத்தனை கட்சிகளும் வந்துவிடும் என்றும், தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனித்துவிடப்படும் என்றும்” அவர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் விஜய் – அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்துவிடும் என்றும், எனவே அந்த கூட்டணி மிகப்பெரிய பலமாகி ஆட்சியை பிடித்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனவே, எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற ஒரு ‘ஓகே’ சொல்லிவிட்டு, விஜய்யை கூட்டணியில் சேர்க்க இன்னொரு ‘ஓகே’ சொன்னால் போதும், ஆட்சியை பிடித்து விடலாம் என்றும், தேர்தலுக்கு பின்னால் யாருக்கு முதல்வர் பதவி, யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பதை அனைத்து கட்சி தலைவர்களும் உட்கார்ந்து பேசி கொள்ளலாம் என்றும் பழ. கருப்பையாவின் கருத்தை அரசியல் விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர்.

எனவே எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வை வெளியேற்ற ஒரு ‘ஓகே’, விஜய்யை இணைத்துக் கொள்ள ஒரு ‘ஓகே’ சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.