electric train | இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா… தெற்கு ரயில்வே செயலால் கொதிக்கும் சென்னை மக்கள்

சென்னை: வழக்கம் போல் ஞாயிறுகளில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் சிறப்புரயில்கள் இயக்கப்படுவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை…

Opinions of the people of Chennai regarding the cancellation of Tambaram electric trains today

சென்னை: வழக்கம் போல் ஞாயிறுகளில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் சிறப்புரயில்கள் இயக்கப்படுவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை கேட்டு சென்னை, செங்கல்பட்டில் புறநகர் ரயிலை நம்பி உள்ள மக்கள், இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா என்று கொதித்து போய் உள்ளார்கள்.

சென்னை தாம்பரம் பணிமனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி தொடங்கிய பராமரிப்பு பணி இரவு 8 மணி வரை (13 மணி நேரம்) மேற்கொள்ளப்பட உள்து. இதன மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: * கடற்கரை-தாம்பரம், தாம்பரம்-கடற்கரை இடையே இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சாரரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம், பல்லாவரம்-கடற்கரை இடையே 30 முதல் 45 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சாரரயில்கள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரெயிலுக்கான தனி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

* அதன்படி, கடற்கரையில் இருந்து இன்று காலை 6.15, 6.55, 7.20, 7.45, 8, 8.35, 9.38, 10.10, 10.40, 11.20 மதியம் 12, 1.05, 1.30, 2.30, 3.10, 3.45, மாலை 4.10, 4.30, 4.50, 5.10, 5.50, 6.20, 6.50, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் சிறப்பு மின்சாரரயில்கள் பல்லாவரம் வரை இயக்கப்படும்.

* பல்லாவரத்தில் இருந்து இன்று காலை 7.10, 7.45, 8.10, 8.35, 8.55, 9.35, 10.35, 11.05, 11.35, மதியம் 12.10, 12.55, 1.55, 2.25, 3.20, மாலை 4, 4.40, 5.05, 5.20, 5.40, 6.05, 6.40, இரவு 7.15, 7.40, 7.50 ஆகிய நேரங்களில் புறப்படும் சிறப்பு மின்சாரரயில்கள் கடற்கரை வரை இயக்கப்படும்.

* இதேபோல, கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருமால்பூர், அரக்கோணம் இருமார்க்கமாக செல்லும் மின்சாரரயில்களும் ஞாயிறு கால அட்டவணைப்படி இயக்கப்படும். இந்த மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அடிக்கடி இரவு நேர மின்சார ரயில்களும், விடுமுறை நாட்களில் பகலில் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் பகலில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது, சென்னை, செங்கல்பட்டில் புறநகர் ரயிலை நம்பி உள்ள மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.