அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின் ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை வேண்டும் என தர்ம யுத்தம் டத்தினார் ஓபிஎஸ். அதன்பின் பாஜக தலைமை அதில் தலையிட்டு அவரையும் பழனிச்சாமியையும் ஒன்றாக இணைத்து வைத்தது. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி உட்பட சில முக்கிய பதவிகள் அதிமுகவில் கொடுக்கப்பட்டது..
ஆனால் அதன் பின்னரும் அவருக்கும் பழனிச்சாமிக்கும் இடையே செட்டாகவில்லை. பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கினார் பழனிச்சாமி. எனவே கடந்த 5 வருடங்களுக்கும் மேல் சில ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு தனியாக அரசியல் செய்து வருகிறார் பன்னீர்செல்வம். தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக. பாஜக கட்சிகள் இணைந்திருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி இணைய பன்னீர்செல்வம் விரும்பினார்.. ஆனால் அதை பழனிச்சாமி தடுத்துவிட்டார்..
இந்நிலையில்தான், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஒபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இன்று சட்டசபையில் முக ஸ்டாலினை அவர் இரண்டு முறை சந்தித்து பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொன்ன ஓபிஎஸ் ‘கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சியை நிறைவு செய்ததற்கு ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னேன்.. திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் மக்கள் மனதில் பதிந்து விட்டது’ என்று கூறினார்..
திமுக அணியுடன் கூட்டணியில் இணைவீர்களா என்று என்ற கேள்விக்கு பொறுமையாக இருங்கள் என பதில் சொன்னார். ஒ பன்னீர் செல்வத்தின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

