சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ.. வெற்றியோ தோல்வியோ இறங்கி பார்த்துவிடலாம்.. அமித்ஷாவும் வேண்டாம்… ராகுல் காந்தியும் வேண்டாம்.. மக்களை மட்டுமே நம்புவேன்.. மக்கள் என்னை ஏமாற்ற மாட்டார்கள்.. அழுத்தம் கொடுத்தும் கூட்டணிக்கு ‘நோ’ சொன்னாரா விஜய்?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? இந்த வாசகம் விஜய்யின் தற்போதைய மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தனது அரசியல் பயணத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டபோதும், அவர் தனது ஆரம்ப இலக்கில்…

vijay crowd

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? இந்த வாசகம் விஜய்யின் தற்போதைய மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தனது அரசியல் பயணத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டபோதும், அவர் தனது ஆரம்ப இலக்கில் இருந்து சற்றும் விலகவில்லை என்றும், தேசிய கட்சிகளின் அழுத்தங்களுக்கும் மசியாமல் தனித்து இயங்குவதே சரியான வழி என முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தனது கட்சியை தொடங்கிய குறுகிய காலத்தில், தமிழக அரசியல் களத்தில் அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். இதற்கு சான்றாக, இரண்டு தேசிய கட்சிகள் உட்பட பல மாநிலக் கட்சிகள் அவருடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன.

கரூர் சம்பவங்கள் மற்றும் சமீபத்திய அரசியல் சலசலப்புகளை அடிப்படையாக வைத்து, ஒருபுறம் பாஜக தலைமை, விஜய்க்கு சாதகமான வகையில் பேசி, அவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம், தமிழகத்தில் தமது கட்சியை பலப்படுத்த விரும்பும் காங்கிரஸ் தலைமை, விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் அது இருவருக்கும் ‘வெற்றி வாய்ப்பாக அமையும் என்று கருதுகிறது.

அதேபோல் டிடிவி தினகரனின் அமமுக, டாக்டர் ராமதாஸின் பாமக, பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும், விஜய்யுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியும், தத்தம் கட்சிகளை நிலை நிறுத்தி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அவருடன் சேர ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இத்தனை கட்சிகளின் கூட்டணி அழுத்தங்களுக்கு மத்தியில், விஜய் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அது, மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் விஜயகாந்த் பாணியை ஒத்த ஒரு தெளிவான நிலைப்பாடு: “அமித் ஷாவும் வேண்டாம்… ராகுல் காந்தியும் வேண்டாம்… மக்களை மட்டுமே நம்புவேன்! என்பதுதான்.

பல கட்சிகள் புதிதாக வந்த ஒரு இயக்கத்தை வைத்து தங்களது கட்சியை வளர்க்க விரும்பும் நிலையில், “நாம் ஏன் மற்ற கட்சிகளை வளர்க்க வேண்டும்? நம்முடைய கட்சியை நாமே வளர்க்கலாம். யாருடைய துணையும் தேவையில்லை” என்ற முடிவை விஜய் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

“மக்கள் நிச்சயம் என்னை ஏமாற்ற மாட்டார்கள். மக்கள் என்னுடைய நம்பிக்கையை வீணாக மாட்டார்கள்” என்று அவர் உறுதியாக நம்புவதாகவும் தெரிகிறது. பல்வேறு தரப்பிலிருந்து வந்த அழுத்தங்களுக்கு அவர் இடம்கொடுக்காமல், கூட்டணி இல்லை என்ற முடிவை எடுத்திருப்பதன் மூலம், அவர் தனது ஆரம்ப நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்: தன்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்று கொள்ளும் கட்சிகள் மட்டும் தன்னுடன் வரலாம்; மாறாக, அவர் இன்னொரு கூட்டணியில் ஒரு உறுப்பினராக சென்று நிற்க மாட்டார்.

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. அதுபோலவே, தமிழக வெற்றி கழகத்திற்கு சில சோதனைகள் வந்தாலும், அதன் வளர்ச்சியில் இறக்கம் இருக்காது என்ற நம்பிக்கையில் விஜய் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.விஜய்யின் இந்த அரசியல் பயணம், மக்களின் தீர்ப்பையே இறுதியாக ஏற்றுக் கொள்ளும் முடிவில் உள்ளது.

“மக்கள் விரும்பினால் தன்னை முதலமைச்சர் ஆகட்டும். மக்களுக்கு தேவையானதை உண்மையாக செய்வோம். ஒருவேளை மக்கள் விரும்பாவிட்டால் பரவாயில்லை, மக்களின் முடிவை தாராளமாக ஏற்றுக்கொள்வோம்.” என்ற மனநிலையில் விஜய் இருப்பதால், இந்த தெளிவான முடிவால் தமிழக அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.