மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் என்ற வார்த்தை இல்லை என்பதால் அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது, ‘ஒரு மூத்த தலைவர் தமிழ் குறித்து கூறியதை குறிப்பிட்டார். அவர் பெயரை கூட குறிப்பிட விரும்பவில்லை. அவர் கூறி விடுதலை” இதழில் 1943 ஆம் ஆண்டு வெளி வந்தது என்றும், தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்றும், தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர்வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்றும் தொடங்கினார். தமிழ் படிப்பதற்கு செலவிடும் காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால் வாழ்வில் பயன் கிடைக்கும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் கற்ற ஒரு புலவர் கூறினார் என குறிப்பிட்டார்.
தமிழை பற்றி இவ்வாறு எளிதாக பேசியவரை திமுக எம்.பி.க்கள் தங்கள் அறையில் வைத்து வழிபடுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறினார். இதற்காக விஜய் தனது எக்ஸ் (X) பக்கத்தில் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.
ஆனால், அந்த அறிக்கையில் அவர் மத்திய நிதி அமைச்சருக்கு வருத்தம் என்றே தெரிவித்திருக்கிறார். நிர்மலா சீதாராமனின் பெயரையும் கூட குறிப்பிடவில்லை. இந்த அளவுக்கு அவர் பயப்படுகிறாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே அவர் திமுக அரசையும் பாஜக அரசையும் மறைமுகமாகத்தான் தாக்கி வருகிறார் என்றும், “மாநில அரசு, மத்திய அரசு” என்று தான் சொல்லி வருகிறார் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இப்போது மத்திய அமைச்சர் பேசியதை குறிப்பிட்டு, அவரது பெயரையும் தைரியமாக வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருக்கலாமே என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.