புதிய அதிமுகவில் எடப்பாடி, ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், தினகரன், சசிகலா.. அமித்ஷாவின் மெகா கணக்கு..!

  அதிமுகவுடன் கூட்டணி என்பதைக் உறுதி செய்த அமித் ஷா, அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒரு பிரிவு அதிமுகவை மட்டும் நம்பாமல், ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வேண்டும் என்பதில் திட்டவட்டமாக…

admk

 

அதிமுகவுடன் கூட்டணி என்பதைக் உறுதி செய்த அமித் ஷா, அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒரு பிரிவு அதிமுகவை மட்டும் நம்பாமல், ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். அதனால், எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டியோ அல்லது சம்மதிக்க வைத்தோ அதிமுகவிலிருந்து பிரிந்து அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று அவர் காய் நகத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதனால், சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் ஆகிய மூவரும் மீண்டும் அதிமுகவில் இணைய இருப்பதாகவும், அவர்களுக்கு சில பதவிகள் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சசிகலா அவைத் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. செங்கோட்டையன் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக, ஓ.பி.எஸ் துணைப் பொதுச் செயலாளர் என்ற திட்டம் அமித் ஷாவின் மனதில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தினகரனுக்கும் ஒரு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும், இதனால் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் என்றும் கணக்குப் போட்டு இருக்கிறார்.

அது மட்டும் இன்றி, தேமுதிக, பாமக மற்றும் சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து, சீமான் கட்சியையும் இணைத்து, திமுகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார். “விஜய் தனித்திருந்தால் கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்க முடியாது” என்பதை உறுதியாக நம்பும் அமித் ஷா, “விஜய் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று கூறிவிட்டதாகவும், “நமக்கு டார்கெட் திமுகதான்” என்று தனது தமிழக ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார் என்றும் தெரிகிறது.

எனவே, சீமான் உள்பட திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து புதிய கூட்டணி உருவாகும் என்றும், அதிமுகவிலும் பல திடுக்கிடும் மாற்றங்கள் இனிவரும் நாட்களில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தேர்தல், இதுவரை தமிழகம் சந்திக்காத வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்று தான் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் இந்த கணக்கு பலிக்குமா? அல்லது எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை விட்டுக்கொடுக்காமல் வேறு ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.