சினிமா பாணியில் நாமக்கலில் நடந்த சேசிங்.. என்கவுண்டர்.. கன்டெய்னரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

By John A

Published:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென அடுத்தடுத்து பைக், கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்றது. உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரைக் கண்டதும் கண்டெய்னர் லாரியை சாலையின் நடுவில் நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டெய்னரை போலீசார் சோதனையிட்ட போது உள்ளே பதிவெண் இல்லாத சொகுசு காரும், கட்டுக் கட்டாக 50 இலட்சத்திற்கும் அதிகமான பணமும் இருந்துள்ளது. மேலும் கண்டெய்னருக்குள் பதுங்கி இருந்த 7 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவன் மட்டும் காவல் துறையினரைத் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். அவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

டிஸ்னி நிறுவனத்தில் வேலைநீக்க நடவடிக்கை.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

இந்நிலையில் கேரளாவில் நேற்று 3 இடங்களில் ஏ.டி.எம்-களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் கேரள போலீசார் தமிழக காவல்துறைக்கும் இக்கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தந்தனர். இன்று பிடிக்கப்பட்ட இந்த கண்டெய்னர் லாரியில் பணமும், ஏடிஎம் இயந்திரமும் இருந்தால் நேற்று கேரளாவில் நடந்த கொள்ளை சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

மேலும் கொள்ளையர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது நாமக்கல் குமாரபாளையம் பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த போலீசார் பள்ளிப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தினை டி.ஐ.ஜி, எஸ்.பி. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.