பக்தர்களின் கண்ணீர் வெள்ளத்தில் ‘சுப்புலட்சுமி’ யானை… சிசிக்சை பலனின்றி உயிரிழந்த சோகம்..

Published:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றத்தூரில் பிரபல முருகன் கோவிலான சண்முகநாதர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இக்கோவிலுக்கு கடந்த 1971-ல் யானை ஒன்று பக்தரால் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு சுப்புலட்சுமி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மேலும் கோவில் விழாக்களிலும் யானை பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. கடந்த 50 ஆண்டுகளாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தது சுப்புலட்சுமி யானை.

இந்நிலையில் நேற்று முன்தினம் யானை தங்க வைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் மேல் பகுதியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் யானைக்கு தீக்காயம் ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினரும் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். பின்னர் யானைக்கு கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து பேசிய தொழிலதிபர்.. கைகூப்பி மன்னிப்பு கேட்டார்..!

எனினும் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி யானை இன்று அதிகாலை உயிரிழந்துள்ளது. இதனால் குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பக்தர்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் யானைக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் பலரும் திரண்டு வந்து சுப்புலட்சுமி யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இதே போன்று புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் வனத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கு வருடந்தோறும் மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் யானைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகள், மருத்துவ முகாம் போன்றவையும் மன உளைச்சலைப் போக்கி, தெம்பு ஏற்படுத்தவும், ஓய்வு கொடுக்கவும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...