பெண்களின் ஓட்டுக்களையா பிரிக்க பாக்குற.. விஜய்க்கு எதிராக கனிமொழியை களத்தில் இறக்கிய திமுக.. அப்பாவின் அரசியல் சாணாக்கியத்தை பயின்ற கனிமொழியின் அரசியல் அதிரடி ஆரம்பமாகுமா? மகளிர் உரிமை தொகை விரிவாக்கம், பீகார் போல் மகளிருக்கு ரூ.10,000, பொங்கல் பரிசு ரூ.5000 குறித்த அறிவிப்பு வருமா? வந்தால் ஓட்டுமொத்த பெண்கள் ஓட்டும் திமுகவுக்கு செல்லுமா?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் இந்த அதிரடி அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வரும் திமுக தலைமை, விஜய்யை டார்கெட் செய்யும் விளையாட்டை தொடங்கியுள்ளதாக கூறப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

vijay kanimozhi

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் இந்த அதிரடி அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வரும் திமுக தலைமை, விஜய்யை டார்கெட் செய்யும் விளையாட்டை தொடங்கியுள்ளதாக கூறப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக-வின் மேற்கு மண்டல மகளிரணி மாநாடு வரும் டிசம்பர் 29-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தவெக தலைவர் விஜய் ஈரோடு சென்று வந்த பத்து நாட்களிலேயே அதே கொங்கு மண்டலத்தில் திமுக தனது மகளிர் சக்தியை காட்ட தயாராகி வருகிறது. துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டின் மூலம், பெண்களுக்கான அரசின் திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை மற்றும் விடியல் பயண திட்டங்களை மீண்டும் மக்களிடம் ஆழமாக பதிய வைப்பதே திமுக-வின் வியூகமாகும்.

திமுக-வின் இந்த திடீர் மகளிரணி எழுச்சிக்கு முக்கிய காரணம், அண்மைகாலமாக விஜய்யின் கட்சியை நோக்கி நகரும் பெண் வாக்காளர்களின் மனநிலைதான். இதனை முறியடிக்கவே முதல்வர் ஸ்டாலின் அண்மையில் மகளிர் உரிமை தொகை பயனாளிகளின் எண்ணிக்கையை 17 லட்சம் வரை அதிகரித்து, சுமார் 1.31 கோடி பெண்களுக்கு இத்திட்டம் கிடைப்பதை உறுதி செய்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக, தனது சாதனைகளை ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு சேர்க்க ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணையாவது கேன்வாஸ் செய்ய வைக்க வேண்டும் என்ற இலக்கை மகளிரணிக்கு வழங்கியுள்ளது. பெண்களின் ஆதரவுதான் ஆட்சியின் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்பதில் ஆளுங்கட்சி உறுதியாக இருக்கிறது.

என்றாலும், கட்சிக்குள் பெண்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவம் குறித்த விமர்சனங்களும் திமுகவை சுற்றியே வருகின்றன. 78 மாவட்ட செயலாளர்களில் கீதா ஜீவன் மட்டுமே ஒரு பெண்ணாக இருப்பதும், தலைமை பொறுப்புகளில் கனிமொழியை தவிர வேறு பெண்கள் இல்லாததும் திராவிட மாடல் ஆட்சியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், விஜய்யின் தாக்கத்தை குறைக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு பெண் வேட்பாளரையாவது நிறுத்த திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. பெண்களை மையப்படுத்திய இந்த அரசியல் போட்டி, வரும் காலங்களில் சட்டமன்றத்தில் பெண்களுக்கான சமமான பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் இது ஒரு ஆரோக்கியமான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யின் வருகையால் ஏற்பட்டுள்ள பதற்றம், பாரம்பரிய கட்சிகளை தங்களை சீரமைத்து கொள்ளவும், பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கவும் தூண்டியுள்ளது.

ஈரோடு முதல் திருப்பூர் வரை விரிந்துள்ள இந்த அரசியல் ஆடுபுலி ஆட்டம், 2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகும். அனைத்து கட்சிகளும் பெண் மற்றும் இளைஞர் வாக்குகளை குறிவைத்து களம் காண்பதால், தமிழகத்தின் அரசியல் களம் இன்னும் சில மாதங்களுக்கு அதிரடியாகவே இருக்கும்.

கனிமொழி தனது சிறுவயது முதல் கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனத்தை பார்த்து வளர்ந்தவர் என்பதால், அவரிடம் பெண்களின் வாக்குகளை கவரும் புரோஜக்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கனிமொழியும் இதனை சிறப்பாக செய்து முடித்தால், கட்சியில் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் விஜய்க்கு எதிராக கனிமொழி களமிறக்கப்பட்டுள்ள நிலையில் பெண்களின் வாக்குகள் பாரம்பரிய கட்சியான திமுகவுக்கு செல்லுமா? அல்லது புதிய வரவான விஜய்யின் தவெகவுக்கு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.