குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்

சென்னை: தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அண்மையில் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில்…

Jackpot announcement for tnpsc group 4 exam candidates and The biggest good news from the Tamil Nadu government

சென்னை: தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அண்மையில் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் குரூப் 4 பிரிவில் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் இருப்பதால் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. பின்னர் ஜூன் 9-ல் குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன ..

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி குரூப் 4 தேர்வில் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது.மேலும் குரூப் 4 பிரிவில் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் இருப்பதால் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை எழுந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்,”தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்” என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6,244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இந்த தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இதேபோல் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப்படையில், குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் சொல்கின்றன.