இளைஞர்களே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு.. இராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம்.. எங்கே தெரியுமா?

By John A

Published:

பெரும்பாலான இளைஞர்களின் கனவு வேலையாக இருப்பது இந்திய ராணுவத்தில் சேர்வது தான். நாட்டிற்ககப் பணியாற்றுவது நமக்குப் பெருமையாக இருந்தாலும், இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்களும் அதிகம். இதனால் ராணுவத்தில் சேர இளைஞர்கள் போட்டா போட்டி போடுகின்றனர். மேலும் மத்திய அரசு தற்போது அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய இராணுவத்தில் இளைஞர்களைப் பணியமர்த்துகிறது.

தற்போது இராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகிற நவம்பர் 4-ம் தேதி கோவையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் இம்முகாமில் தமிழகம் உள்பட தெலுங்கானா, கோவா, புதுச்சேரி, டையூ, டாமன் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் பங்குபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இராணுவத்தின் தெற்குக் கட்டளையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய ராணுவத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வருகிற நவம்பர் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ராணுவ வீரர்கள், சமையலர், சலவைத் தொழில், கிளர்க் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

இன்னும் 60 நாட்களில் உலக அளவில் ஏற்படப் போகும் பயங்கர மாற்றம்.. நாஸ்டார்டாம்ஸ்-ன் அதிர்ச்சி கணிப்பு

நவம்பர் 4-ம் தேதி புதுச்சேரி உள்பட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அடுத்து வரும் நாட்களில் பிற மாநில இளைஞர்களுக்கும், நவம்பர் 7-ம் தேதி தமிழக மாவட்டங்களான அரியலூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கள்ளக் குறிச்சி, கரூர், கடலூர், செங்கல்பட்டு, நீலகிரி, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8-ம் தேதி இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கு பெறலாம் என அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக மருத்துவப் பரிசோதனை மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.