2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் விஜய்யும் உதயநிதியும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால், உதயநிதி வாஷ் அவுட் ஆகி விடுவார் என்று அரசியல் விமர்சகர் ஜெரால்ட் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்து ஒரு வருடம் மட்டுமே முழுமையாக நிறைவடைந்த நிலையில், அவருக்கு சுமார் 20% வாக்குகள் இருப்பதாக இப்போதே அரசியல் வியூக நிபுணர்கள் கணித்துள்ளனர். பிரசாந்த் கிஷோர் கூட 15 முதல் 20 சதவீதம் விஜய் கட்சிக்கு வாக்களிப்பதாகக் கூறியிருந்தார் என்பதும், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என மூத்த பத்திரிகையாளர் மணி உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் இன்னும் முழுமையாக அரசியல் களத்தில் இறங்காத நிலையிலேயே 20% வாக்குகள் இருக்கிறது என்றால், இன்னும் 8 மாதத்தில் அவர் இரண்டு அல்லது மூன்று முறை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தால் முப்பது சதவீத வாக்குகள் உறுதி என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில், அரசியல் விமர்சகர் ஜெரால்ட் சமீபத்தில் யூடியூப் வீடியோ ஒன்றில் கூறியது, “விஜய் மட்டும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு வந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடலாம் என்று அமித்ஷா எண்ணுகிறார் என்றும், ஆனால் அவரால் விஜய்யை உள்ளே அழைத்து வர முடியவில்லை என்றும் கூறினார். வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்கிற சக்தி விஜய் என்பது அனைவருக்கும் தெரியும், அனைவருக்கும் புரிகிறது என்றும், இப்போதுதான் விஜய்யின் உண்மையான பவரை அனைவரும் உணர்ந்து வருகின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை எதிர்த்து விஜய் ஒருவேளை போட்டியிட்டால் அவரால் ஜெயிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெரால்ட், “இது என்ன கேள்வி? உதயநிதி வாஷ் அவுட்!” என்று கூறியதுதான் ஆச்சரியத்தின் உச்சமாக உள்ளது. “மக்களுக்கு எல்லா அரசியலும் தெரியும் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் மட்டும் வெளியாகட்டும், ஒட்டுமொத்த மக்கள் அந்த சின்னத்திற்குப் போய் வாக்களிப்பார்கள்” என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார்.
“திருமாவளவனுக்கு உள்ள அரசியல் அறிவு விஜய்க்கு இல்லை என்றும், திருமாவளவன் மட்டும் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிவிட்டால், தி.மு.க. ஆட்டம் கண்டுவிடும்” என்றும் அவர் இன்னொரு கேள்விக்குப் பதிலளித்தார். “தமிழக வெற்றிக் கழகமும், தி.மு.க.வும் நேருக்கு நேராக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால், மிக எளிதில் தி.மு.க.வை தமிழக வெற்றிக் கழகம் வென்றுவிடும் என்றும், தி.மு.க. தற்போது உயிர்ப்புடன் இருப்பதற்கு ஒரே காரணம் திருமாவளவன் உட்பட கூட்டணி கட்சிகள்தான்” என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விஜய்க்கு இருக்கும் வாக்கு சதவீதம் குறித்து தெரிய வந்துள்ளது என்றும், ஆனால் உள்ளுக்குள் பயத்தை வைத்துக்கொண்டு வெளியே ‘விஜய் எல்லாம் ஒன்றுமே இல்லை, அவர் தனது வாக்கு சதவீதத்தை நிரூபிக்க வேண்டும்’ என்று கூறி வருகின்றன” என்றும் அவர் தெரிவித்தார். “அமித்ஷாவுக்கு மட்டும்தான் விஜய்யின் பவர் என்ன என்று புரிந்திருக்கும் என்றும், அவரை எப்படியாவது கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருவதாகவும்” அவர் இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார்.
“தமிழக வெற்றிக் கழகம் என்ற தனிப்பட்ட அரசியல் கட்சியையும், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிப்பட்ட அரசியல் கட்சியையும் ஒப்பிட்டால், தமிழக வெற்றிக்கழகத்திற்கு தான் அதிக வாக்குகள் இருக்கிறது என்றும், ஒவ்வொரு வீட்டிலும் விஜய்க்காக ஒன்று அல்லது இரண்டு வாக்குகள் இருக்கிறது என்றும் நீங்கள் வேண்டுமானால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டாரத்தில் விசாரித்து பார்த்துக் கொள்ளுங்கள்” என்றும் அவர் இன்னொரு கேள்விக்குப் பதிலளித்தார். “தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் மட்டும் தான் வாக்கு வங்கிஅதிகம் வைத்திருக்கும் கட்சி என்றும், அந்த ஒரு கட்சி மட்டும் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிவிட்டால், தி.மு.க. கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்” என்றும் அவர் இன்னொரு கேள்விக்குப் பதிலளித்தார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக இருக்கும் தி.மு.க.வுக்கு நிகராக, கட்சி ஆரம்பித்து ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள தமிழக வெற்றி கழகத்துடன், அரசியல் விமர்சகர் ஜெரால்ட் ஒப்பிடுவதை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், தேர்தல் முடிவு இதற்கு பதிலளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Political Analyst Predicts Udhayanidhi Will Be “Washed Out” If Vijay Contests in Chepauk
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
